Ravichandran Ashwin: 500 விக்கெட் சாய்த்த நாதன் லயனை இப்படி பாராட்டிய அஸ்வின்!
Dec 18, 2023, 09:41 AM IST
Nathan Lyon: டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது பந்துவீச்சாளர் ஆனார் லயன். இந்த சாதனையை நிகழ்த்தியவர்களில் ஷேன் வார்னே (708) மற்றும் கிளென் மெக்ராத் (563) ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், 500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் ஆஸி., பவுலர் நாதன் லயன். அவரது சாதனையைத் தொடர்ந்து இந்திய நட்சத்திர பவுலர் ஆர்.அஸ்வின், எக்ஸ் எனும் சமூக வலைத்தளத்தில் லயனை GOAT எமோஜியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை நாதன் லயனும் பகிர்ந்து கொண்டார், ஆஃப்-ஸ்பின்னரான லயன் "எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவர் அஸ்வின்" என்று பாராட்டினார். லயனின் வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
நாதன் லயன் தனது ஆஷஸ் தொடரில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 500 விக்கெட்டுகளை நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி ஆஸி.,க்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்தது. அந்த டெஸ்டில் ஆஸி., அபார வெற்றி கண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் மற்றும் அமீர் ஜமால் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்த பிறகு லயன், 499 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார். பாக்கிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் எல்பிடபிள்யூவில் டிஆர்எஸ் கோரி ஃபஹீம் அஷ்ரப்பை ஆட்டமிழக்கச் செய்தபோது லயன் 500வது விக்கெட்டை பெற்றார்.
டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது பந்துவீச்சாளர் ஆனார். ஆஸி.,யை பொறுத்தவரையில் ஷேன் வார்னே (708) மற்றும் கிளென் மெக்ராத் (563) ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் ஆனார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் அடங்கிய பட்டியலில் நான்காவது சுழற்பந்து வீச்சாளராகவும் ஆனார்.
அஸ்வின் வெளியிட்ட பதிவு விவரம்:
“500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த 8வது பவுலர் மற்றும் இரண்டாவது ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன். வாழ்த்துக்கள் தோழா” என குறிப்பிட்டு இரண்டு GOAT எமோஜியை குறிப்பிட்டுள்ளார்.
GOAT என்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என்பதை குறிக்கும். அதாவது, Greatest of all time என்பது அதன் முழு விளக்கம்.
நாதன் லயன் கூறுகையில், "இது நான் மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம், 500 விக்கெட் டெஸ்டில் எடுப்பது, இது ஒரு பெரிய மைல்கல்" என்றார்.
ஆர்.அஸ்வின் 489 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் உள்ளார்.
டாபிக்ஸ்