Ravichandran Ashwin: 500 விக்கெட் கிளப்பில் இணைந்த அஸ்வின்! முதல் பவுலராக நிகழ்த்திய தனித்துவ சாதனை என்ன தெரியுமா?
Feb 16, 2024, 05:15 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் என்ற எலைட் லிஸ்டில் நுழைந்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், மொத்தமாக 9வது பவுலராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. ரோகித் ஷர்மா 131, ஜடேஜா 112, அறிமுக வீரர் சர்ஃப்ரஸ் கான் 62 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இதில் இங்கிலாந்தின் முதல் விக்கெட்டாக 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாக் கிராவ்லியை தூக்கினார் அஸ்வின். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதன் மூலம் இந்தியாவின் முன்னாள் ஸ்பின் பவுலரான அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என சாதனை புரிந்துள்ளார் அஸ்வின். முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, நாதன் லயன் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார் அஸ்வின்
ஒட்டுமொத்தமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தியருக்கும் 9வது பவுலராக இருந்து வருகிறார் அஸ்வின்.
கடந்த 2011இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின், இதுவரை எடுத்திருக்கும் 500 விக்கெட்டுகளில் 337 விக்கெட்டுகளை இந்திய மண்ணில் வைத்து எடுத்துள்ளார். இந்தியாவின் ஸ்டிரைக் பவுலராக இருந்து வரும் அஸ்வின் 98 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 500 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற பவுலர்கள் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய பின்னரே இந்த மைல்கல்லை எட்டினர். ஆனால் அஸ்வின் 100 போட்டிகளுக்கு முன்னரே அதை செய்திருப்பது தனித்துவமான சாதனையாக அமைந்துள்ளது.
அஸ்வின் இதுவரை 8 முறை 10 விக்கெட்டுகளும், 34 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஆண்டர்சன், ஆஸ்திரேலியா ஸ்பின்னர் நாதன் லயன், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மட்டுமே 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களாக உள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்