Pakistan Cricket Team: பாகிஸ்தான் ட்ரெசிங் ரூம் மோதல்! என்ன நடந்தது? - சீனியர் வீரர் சொல்லும் தகவல்
Sep 18, 2023, 01:54 PM IST
பாகிஸ்தான் அணியில் டிரெசிங் சலசலப்பு நிகழ்ந்து பிளவு ஏற்பட்டதா, உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து பாகிஸ்தான் சீனியர் வீரர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில்பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறி, கடந்த இரு நாள்களுக்கு முன்னர் அந்த அணியின் டிரெசிங் ரூமில் நடைபெற்ற சலசலப்பான சம்பவத்தை தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து உண்மையில் டிரெசிங் ரூமில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பாகிஸ்தான் சீனியர் வீரர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: "அணியின் ஒட்டுமொத்த கவனமும் கிரிக்கெட் விளையாட்டு மீதே உள்ளது. விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. தோல்வி அடையும் போட்டியில் வீரர்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை பகிர்வது இயல்புதான். ஆனால் இது எதிர்மறையாக பரவியுள்ளது.
அணி மீட்டிங்கில் அனைத்து வீரர்களும் அவர்களது எண்ணத்தை பகிர்ந்தனர். இதில் வீரர்களுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்றதாக தகவல் பரவியுள்ளது. இது உண்மை கிடையாது. மீட்டிங் முடித்து விட்டு அனைத்து வீரர்களும் ஒன்றாகவே கிளம்பி, ஒரே பிளைட்டில் பாகிஸ்தான் பயணித்தோம்" என்றார்.
முன்னதாக, நாக் அவுட் போட்டி போல் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. இந்த போட்டிக்கு பிறகு டிரெசிங் ரூமில் வைத்து நடைபெற்ற அணி மீட்டிங்கில் வீரர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டதாகவும், சக வீரர்களின் எதிர்ப்பை பாபர் அசாம் எதிர்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதில் சீனியர் வீரர்களை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பாபர் அசாம் குற்றச்சாட்டை முன்வைக்க, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கலாம் என பதில் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்துக்கு பின் பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை, சிதறிக் கிடக்கிறார்கள், உலகக் கோப்பை தொடருக்குள் அதை சரி செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊடகங்களில் வெளியானது போல் எந்த வொரு சம்பவமும் பாகிஸ்தான் அணி டிரெசிங் ரூமில் நடக்கவில்லை என சீனியர் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்