தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: உதவி இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை! கும்ப்ளேவுக்கு கிடைத்த பாக்கியம் கிடைக்காமல் போன முரளிதரன்

HT Cricket Special: உதவி இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை! கும்ப்ளேவுக்கு கிடைத்த பாக்கியம் கிடைக்காமல் போன முரளிதரன்

Jan 04, 2024, 06:30 AM IST

google News
கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது சக வீரர்கள் உதவியது போல், இலங்கை ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கையில் மற்ற வீரர்கள் நன்கு உதவியபோதிலும் அவரால் சாதனை நிகழ்த்த முடியாமல் போனது துர்தஷ்டமாகவே உள்ளது.
கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது சக வீரர்கள் உதவியது போல், இலங்கை ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கையில் மற்ற வீரர்கள் நன்கு உதவியபோதிலும் அவரால் சாதனை நிகழ்த்த முடியாமல் போனது துர்தஷ்டமாகவே உள்ளது.

கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது சக வீரர்கள் உதவியது போல், இலங்கை ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கையில் மற்ற வீரர்கள் நன்கு உதவியபோதிலும் அவரால் சாதனை நிகழ்த்த முடியாமல் போனது துர்தஷ்டமாகவே உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி யாரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத அளவில் இமாலய சாதனையை நிகழ்த்திவிட்டு சென்றவர் இலங்கையின் ஸ்பின் ஜாம்பவானான முத்தையா முரளிதரன். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் ஸ்பின்னர் என்ற சாதனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே வசம் உள்ளது.

இவரை போல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் வாய்ப்பு முரளிதரனுக்கு, அதுவும் தனது உள்ளூர் மைதானத்தில் கிடைத்தபோதிலும் அது நிறைவேறாமல் போயுள்ளது. இத்தனைக்கும் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை எடுத்த இன்னிங்ஸில் சக வீரர்கள் கேட்ச்கள் பிடிக்காமலும், எல்பிடபிள்யூ அப்பீல் செய்யாமலும், பவுலர்கள் விக்கெட் வீழ்த்தும் பந்தை வீசாமலும் என பல வகைகளில் உதவி புரிந்தனர்.

இதேபோன்ற உதவியை இலங்கை வீரர்கள் ,முத்தையா முரளிதரனுக்கு செய்த போதிலும், விதியின் விளையாட்டால் அவரால் 10 விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் போனது. முரளிதரன் டெஸ்ட் கேரியரில் சிறந்த பவுலிங்காக இருந்து வரும் 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் எடுத்த போட்டி சரியாக 22 ஆண்டுகளுக்கு முன் ஜனவரி 4ஆம் தேதியான இதே நாளில் தான் நடைபெற்றது.

இலங்கை சுற்றுப்பயணம் செய்த ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி முரளிதரனின் உள்ளூர் மைதானமான கண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 236 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அனைத்து 9 விக்கெட்டுகளையும் முரளிதரன் தான் வீழ்த்தினார். இந்த சூழ்நிலையில் இரண்டாவது நாளில் அவர் எஞ்சிய விக்கெட்டையும் வீழ்த்தினால் கும்ப்ளே சாதனையை சமன் செய்யலாம் என்கிற வாய்ப்பு இருந்தபோது நடந்தது அந்த டுவிஸ்ட்.

கடைசி விக்கெட்டை முரளிதரன் தான் வீழ்த்த வேண்டும் என இலங்கை வீரர்கள் அவருக்கு உதவும் விதமாக அப்பீல் செய்யாமலே இருந்தனர். இதை சாதகமாக்கி ஜிம்பாப்வே அணியும் கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தியது. அப்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளரான சமிந்தா வாஸ் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். அவர் வீசிய ஓவர் கடைசி பந்தில் ஸ்டிரைக்கில் இருந்த ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் ஹென்றி ஒலாங்கா, அவுட்சைடு ஆஃப் சென்ற பந்தை கவர்ஸில் ஆட முயற்சித்து போதி பேட்டில் அவுட்சைடு எட்ஜ் ஆகியது. பந்து நேராக விக்கெட் கீப்பர் சங்ககாரா கைளில் சிக்க, அவுட் என தெரிந்தபோதிலும் அவர் அப்பீல் செய்யாமல் பந்தை மேலே தூக்கி வீசனார்.

இதற்கிடையே ஹவுஸ்சாட் என்கிற அப்பீல் குரல் மட்டும் கேட்க அம்பயர் வேறு வழியில்லாமல் ஆள் காட்டி விரலை தூக்கி ஒலங்காவை வெளியே அனுப்பினார். இதன் மூலம் முரளிதரன் 10 விக்கெட் வாய்ப்பும் பறிபோனது. முரளிதரனுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்த அந்த போட்டியில் கடைசி நேரி விதியின் விளையாட்டால் சாதனை நிகழ்த்த முடியாமல் போனது. இருப்பினும் அவரது அபார பந்து வீச்சை பாராட்டும் விதமாக ஒட்டு மொத்தம் ஸ்டேடியமும் எழுந்து நின்று கரகோஷங்களை எழுப்பியது. சக வீரர்களும் முரளிதரனுக்கு பாராட்டும், ஆறுதலும் தெரிவித்தனர்.

இந்த போட்டியில் முரளிதரன் முதல் இன்னிங்ஸில் 40 ஓவர்கள் வீசி 19 மெய்டன்கள், 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பவுலிங்காக உள்ளது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மொத்தம் 13 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு பவுலர் எத்தனை ஓவர்களும் வீசலாம் என்பதால், குறிப்பிட்ட பவுலர் முதல் 6 முதல் 7 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டாலே மீதமுள்ள விக்கெட்டுகளையும் அவரே வீழ்த்துவதற்கு ஏதுவாக அணியின் வீரர்கள் செயல்படுவது இயல்புதான். இந்த சூழ்நிலையில் உலகின் டாப் பேட்ஸ்மேன்களையே தனது அற்புத பவுலிங்கால் மிரள வைத்த டாப் கிளாஸ் பவுலராக திகழ்ந்த முரளிதரனுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பு அமைந்தும் அது நடக்காமல் போனது துர்தஷ்டமான விஷயமே.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி