Ishan Kishan: ஆப்கன் தொடரில் இஷான் கிஷன் ஏன் இடம்பெறவில்லை?
Jan 08, 2024, 03:26 PM IST
வியாழன் அன்று தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் மிடில் ஆர்டரில் பேட் செய்யக் கூடியவர்கள் என்பதால் இஷான் கிஷனுக்கு பதில் இவர்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
வியாழன் அன்று தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடர் முறையே மொஹாலி, பெங்களூரு மற்றும் இந்தூரில் நடக்கிறது.
ஆகாஷ் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தொடருக்கு கிஷனை தேர்வு செய்யாமல் சாம்சனைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்று கூறினார்.
"ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இரண்டு விக்கெட் கீப்பர்கள், கடந்த இரண்டு தொடர்களில் சாம்சன் கீப்பராக வைக்கப்படவில்லை என்றாலும், இஷான் கிஷன் கீப்பராக இருந்தார், ஆனால் அவர் இந்த அணியில் இல்லை. ஏன் இஷான் கிஷன் இல்லை என்று யாருக்கும் தெரியாது. அது வேறு கதை,” என்றார் ஆகாஷ்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், காலியான டாப்-ஆர்டர் இடங்களின் பற்றாக்குறை கிஷானை விட சாம்சன் மற்றும் ஜிதேஷ் ஆகியோரை தேர்வு செய்ய தேர்வாளர்களை கட்டாயப்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தார்.
"நீங்கள் திடீரென்று தொடக்க இடத்தை நிரப்பிவிட்டீர்கள். விராட் கோலி 3-வது இடத்தில் விளையாடுகிறார், அவர் நம்பர் 4-ல் விளையாடுவதில்லை. எனவே கீப்பர் ஆர்டரைக் கீழே பேட் செய்ய வேண்டும். உங்களுக்கு இரண்டு கீப்பிங் விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஒருவர் ஜிதேஷ் ஷர்மா மற்றவர் சஞ்சு சாம்சன்," என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே முறையே செஞ்சூரியன் மற்றும் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷான் விலகியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்