Hardik Pandya: பாண்ட்யாவை மீண்டும் அணியில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் டீல் எத்தனை கோடி தெரியுமா?
Nov 25, 2023, 12:22 PM IST
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை திரும்ப பெறுவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ. 15 கோடி வரை செலுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முன் வந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2021 சீசன் வரை விளையாடியுள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் விளையாடிய காலகட்டத்தில் மும்பை அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, மெகா ஏலத்தில் ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் வசமாக்கியது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா, முதல் சீசனிலேயே அணிக்கு சாம்பியன் ஆக்கி வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தார். ஐபிஎல் 2023 தொடரிலும் பைனல் வரை முன்னேறிய நிலையில், தோனியின் சிஎஸ்கே அணிக்கு குஜராத் தோல்வியை தழுவியது.
இதையடுத்து பாண்ட்யாவை மீண்டும் அணியில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி விரும்புவதாக கூறப்படும் நிலையில், இதற்காக குஜராத் அணியுடன் டிரேட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவருக்கு ரூ. 15 கோடி செலுத்த மும்பை அணி நிர்வாகம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா இதற்கு சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் அவரை ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக கேப்டன் பொறுப்பையும் அளிக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யாவை எடுக்கும்பட்சத்தில் ஏற்கனவே அணியில் இருந்து வரும் பிரதான வீரரை மும்பை அணி இழக்க நேரிடும். அதன்படி மும்பை அணியில் கடந்த இரு சீசன்களாக காயம் காரணமாக பெரிதாக விளையாடாத ஜோப்ரா ஆர்ச்சரை கழட்டிவிட முடிவு செய்துள்ளார்களாம். இவர் இல்லாத பட்சத்தில் கேமரூன் க்ரீனை கூட விடுவிக்க தயாராக உள்ளார்களாம்.
ஐபிஎல் 2024 தொடருக்காந ஏலம் டிசம்பரில் துபாயில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கு முன்னர், நவம்பர் 26ஆம் தேதிக்குள் ஐபிஎல் 2024 தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இந்த சூழ்நிலையில் டிரேடிங் மூலம் சில வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாற்றப்பட்டனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யாவை மாற்றிக்கொள்ள அவருக்கு பெரும் தொகையை தருவதற்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முன் வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்