IPL Auction 2024: 2 ஆஸி., வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்-1 மணி நேரத்தில் கம்மின்ஸ் சாதனையை முறியடித்த சக ஆஸி., வீரர்
Jan 06, 2024, 03:30 PM IST
ஐபிஎல் ஏல வரலாற்றில் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் ஆஸி.,யைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடுவார்.
துபாயில் 2024 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆஸ்திரேலிய கேப்டனுக்காக ரூ 20.5 கோடியை செலுத்தியபோது, இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்தார். ஆனால் அவரது சாதனை ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று கம்மின்ஸ் கூட அறிந்திருக்கமாட்டார். ஏனெனில் சக ஆஸ்திரேலியா அணி வீரரான மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு அந்தச் சாதனையை முறியடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ. 24.75 கோடிக்கு அவர் வாங்கப்பட்டார். மிட்செல் ஸ்டார்க் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனுடன் தற்போது இணைந்துள்ளார்.
இதற்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். மிட்செல் ஸ்டார்க்கை குஜராத் டைட்டன்ஸ் வாங்க தீவிர முயற்சி எடுத்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் ஏலத்தில் முட்டி மோதியது என்று கூட சொல்லலாம். ஆனால், இறுதியில் கொல்கத்தா நைர் டைரஸ் அணிக்கு லக் அடித்தது.
கம்பீர் அணி நிர்வாகத்திற்கு கொடுத்த யோசனையின் முடிவில் இந்தத் தொகைக்கு மிட்செல் ஸ்டார்க்கை அந்த அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஐபிஎல் 2024 ஏலத்தில் விற்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை ரூ. 1 கோடி அடிப்படை விலையாக வைத்திருந்த பவல் பெற்றார். Rilee Rossouw ஐ எடுப்பவர்கள் இல்லை, ஆனால் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு DC கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்கு மற்றொரு ஏலப் போர் நடந்தது. இறுதியாக, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் ஹீரோவான டிராவிஸ் ஹெட், SRH க்கு ரூ.6.8 கோடிக்கு வாங்கப்பட்டார். அவரது அடிப்படை ஏல விலை ரூ. 2 கோடியாகும்.
ஸ்டீவ் ஸ்மித், கருண் நாயர் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரை யாரும் எடுக்கவில்லை.
10 அணிகளில் 77 இடங்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தையும் போலவே, ஐபிஎல் 2024 ஏலத்தில் இன்று அதிகபட்ச வீரர்களின் எண்ணிக்கை 77 ஆக இருப்பதால், அணிகள் கவனமாக வீரர்களை தேர்வு செய்து வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பல அணிகளுக்கு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை, அதாவது பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஜெரல் கோட்ஸி, லாக்கி பெர்குசன் மற்றும் வெய்ன் பார்னெல் போன்றவர்கள. பில் சால்ட், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரை ஆர்வத்துடன் வைத்திருக்கும் விக்கெட் கீப்பர்களுக்கான தேவையும் இருக்கும். இந்தியர்களைப் பொறுத்த வரையில், சிவம் மாவி, கார்த்திக் தியாகி, உமேஷ் யாதவ், மானவ் சுதர், ஷாருக் கான் உள்ளிட்டோரைக் கவனியுங்கள்.
டாபிக்ஸ்