Mitchell Marsh: "இதில் என்ன அவமரியாதை இருக்கிறது!" உலகக் கோப்பை மீது கால் வைத்த விவகாரத்தில் மார்ஷ் கேஷுவல் பதில்
Dec 01, 2023, 04:35 PM IST
உலகக் கோப்பை மீது கால்களை வைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேஷுவலாக பதிலை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடரை இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியயா வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6வது கோப்பையை தன் வசமாக்கியது.
இதையடுத்து உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலியா அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது ஹையாக காலகளை வைத்தபடி, கையில் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இதையடுத்து மிட்செல் மார்ஷின் இந்த செயலுக்கு பலரும், கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தலையில் வைத்து கொண்டாட வேண்டிய உலகக் கோப்பை மீது கால் வைத்து அவமரியாதை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், மிட்செல் மார்ஷுக்க எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை 2023 தொடர் முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், மிட்செல் மார்ஷ் அதற்கு பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மார்ஷ் கூறியிருப்பதாவது:
"அந்த புகைப்படத்தில் எந்த அவமரியாதையும் இல்லை என்பது தெளிவாக உள்ளது. அத்துடன் நான் அது பற்றி சிந்திக்கவும் இல்லை. அந்த புகைப்படம் புயலை கிளப்பியதாக பலர் என்னிடம் தெரிவித்தார். நான் அதிகம் சமூக வலைத்தளங்களை பார்ப்பதில்லை. அதில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை"
தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மார்ஷுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்