தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Cricket World Cup Fastest Centuries: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியில் மிரட்டி அதிவேக சதம் அடித்தவர்கள் லிஸ்ட்!

Cricket World Cup Fastest Centuries: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியில் மிரட்டி அதிவேக சதம் அடித்தவர்கள் லிஸ்ட்!

Sep 29, 2023, 06:05 AM IST

google News
உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது அதிரடியான பேட்டிங் மூலம் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்க்கலாம். இந்த லிஸ்டில் இருக்கும் இந்திய பேட்ஸ்மேன் யார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது அதிரடியான பேட்டிங் மூலம் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்க்கலாம். இந்த லிஸ்டில் இருக்கும் இந்திய பேட்ஸ்மேன் யார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது அதிரடியான பேட்டிங் மூலம் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்க்கலாம். இந்த லிஸ்டில் இருக்கும் இந்திய பேட்ஸ்மேன் யார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் டாப் அணிகள் மோதிக்கொள்ளும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றன. இந்த தொடரில் ஒவ்வொரு போட்டிகளிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பல்வேறு தனித்துவமான சாதனைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக வேக சதம் அடித்தவர்களின் லிஸ்டையும், அதில் இடம்பெற்றிருக்கும் இந்திய வீரர்கள் பற்றியும் பார்க்கலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1975 முதல் விளையாடப்பட்டு வருகின்றன. இதுவரை 12 முறை உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5, இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் தலா 2, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், பீல்டர்கள் என அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்திறமையால் விறுவிறுப்பாக்கியுள்ளன. அந்த வகையில் பேட்டிங்கில் அதிரடி காட்டி, உலகக் கோப்பை போட்டிகளில் அதி வேக சதம் அடித்த டாப் 10 வீரர்களை பார்க்கலாம்

கெவின் ஓ பிரெய்ன் - அயர்லாந்து

2011 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார் அயர்லாந்து பேட்ஸ்மேனான கெவின் ஓ பிரெய்ன். இவர் 50 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அதிக வேக உலகக் கோப்பை சதம் என்ற சாதநை புரிந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி அப்செட் செய்தது.

கிளென் மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா

2015 உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல் தனது சதத்தை 51 பந்துகளில் பூர்த்தி செய்தார். இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது

ஏபி டிவில்லியர்ஸ் - தென்ஆப்பரிக்கா

இதுவும் 2015 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற நிகழ்வாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை நாலபுறமும் 360 டிகிரியில் ரன்களை விளாசி தள்ளிய ஏபி டிவில்லியர்ஸ் 66 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். டிவில்லயர்ஸ் தனது சதத்தை 52 பந்துகளில் பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் தென்ஆப்பரிக்கா அணி வெற்றி பெற்றது

இயான் மோர்கன் - இங்கிலாந்து

2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அணியை வெற்றி பெற வைத்ததற்கான ஆட்டமாக மோர்கனின் பேட்டிங் இருந்தது. 57 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார் மோர்கன். கடைசியாக 71 பந்துகளில் 148 ரன்கள் அடித்து அவுட்டானார்.

மேத்யூ ஹெய்டன் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத அணியாக இருந்த காலகட்டத்தில் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார் ஹெய்டன். இந்தப் போட்டியில் தென்ஆப்பரிக்கா தோல்வியை தழுவியது. ஹெய்டன் 68 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஜிம் டேவிசன் - கனடா

2003 உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கத்துக்குட்டி அணியான கனடாவை சேர்ந்த டேவிசன் 76 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் கனடா தோல்வியடைந்தது. அதிக வேக சதம் தோல்வியில் முடிந்த போட்டியாக இது அமைந்தது.

குமார சங்ககாரா - இலங்கை

2015 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 86 பந்துகளில் 117 ரன்கள் அடித்த இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார சங்ககாரா அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவர் தனது சதத்தை 70 பந்துகளில் அடித்தார்

பால் ஸ்டிர்லிங் - அயர்லாந்து

இந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் இரண்டாவது அயர்லாந்து வீரராக உள்ளார் பால் ஸ்டிர்லிங். 2011 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 பந்துகளில் சதமடித்த ஸ்டிர்லிங், 72 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்தப் போட்டியில் அயர்லாந்து 300 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது

கபில் தேவ் - இந்தியா

இந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாக கபில் தேவ் உள்ளார். 1983 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட போட்டியில் 17 ரன்களுக்கு இந்திய அணி 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களமிறங்கி அணியை மீட்ட கபில் தேவ் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்து அணி வெற்றி பெறும் விதமாக கெளரவமான ஸ்கோரை எட்ட செய்தார். இந்தப் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துர்தஷ்டவசமாக பிபிசி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்தப் போட்டியானது ஒளிபரப்பு செய்யவில்லை.

ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலியா

அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் 2007 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. 72 பந்துகளில் சதமடித்த கில்கிறிஸ்ட், 104 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்த லிஸ்டில் இடம்பிடித்த வீரர்கள் அடித்த சதத்தில் கனடா வீரர் டேவிசன் அடித்த சதம் தவிர மற்ற சதங்கள் அனைத்தும் வெற்றிக்கான காரணமாக அமைந்திருந்தன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை