Kohli replacement: விராட் கோலிக்கு பதிலாக டெஸ்ட் அணியில் இடம்பெற போவது யார்?
Jan 23, 2024, 01:36 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் கோலிக்கு பதிலாக இடம்பெறக்கூடிய வீரர்கள் யார்? சதேஷ்வர் புஜாரா, ரஜத் படிதார், சர்பராஸ் கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ரேஸில் உள்ளதாக தெரிகிறது.
விராட் கோலியை ரீபிளேஸ் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அது கஷ்டம். மிகவும் சவாலான சூழ்நிலைகளில் கூட பேட்டிங்கை இவ்வளவு எளிதாக மாற்றுவது யார்? கோலி இருக்கும் வரை, இந்திய அணி உயிர்ப்புடன் இருக்கிறது, அதே நம்பிக்கையை யார் விதைப்பார்கள்?
இந்த கேள்விகளுக்கு தேர்வாளர்களும், கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிர்வாகமும் விரைவில் பதில் கண்டுபிடிக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிவித்துவிட்டார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலக முடிவு செய்தார். மாற்று வீரர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கோலிக்கு பதிலாக வேறு எந்த வீரர் இடம்பெற வாய்ப்பு?
சதேஷ்வர் புஜாரா: புஜாரா, இந்த ஆண்டு ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிராவின் தொடக்க ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 243 ரன்கள் எடுத்த பிறகு, 35 வயதில் மற்றொரு மறுபிரவேசம் சாத்தியமற்றது அல்ல என நிரூபித்தார். ஹரியானா மற்றும் விதர்பாவுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில், அவர் 49, 43, 43 மற்றும் 66 ரன்கள் எடுத்தார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் மட்டுமே 14000 ரன்களை கடந்தார். ஆனால் ரன்களை விட புஜாராவுக்கு சாதகமாக இருப்பது அவரது அனுபவம்தான். கோலி இல்லாத நிலையில், இந்திய பேட்டிங் யூனிட் கோலிக்கு அடுத்தபடியாக மிகவும் அனுபவம் வாய்ந்த ரோஹித்தை பெரிதும் நம்பியுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இன்னும் இந்த வடிவத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இங்கிலாந்து போன்ற ஒரு அணிக்கு எதிராக, தேர்வாளர்கள் புஜாராவை நம்பலாம்.
ரஜத் படிதார்: வலிமையானவர். மத்திய பிரதேச வலது கை பேட்ஸ்மேனான இவர், இந்தியா ஏ அணிக்காக தனது கடைசி மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். இரண்டாவது, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 151 ரன்கள் எடுத்தது, மற்ற அனைத்து இந்திய ஏ பேட்ஸ்மேன்களும் சோபிக்கவில்லை. 12 சதங்களுடன் முதல் தர சராசரி 46 ஆகும்.
சர்பராஸ் கான்: கடந்த ஆண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் தேர்வு செய்யப்படாதபோது நிறைய விவாதங்கள் இருந்தன. அவர் கடந்த இரண்டு ரஞ்சி சீசன்களில் அதிக ரன்கள் எடுத்தவர். அவர் இடம்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ரிங்கு சிங்: சமீபத்தில் தான் அணியில் இடம்பிடித்தார். ஆனால், அவரது சீரான ஆட்டம் அவருக்கு தனி இடத்தை பிடித்துக் கொடுத்துள்ளது. குறிப்பாக மிடில் ஆர்டரிலும், டெத் ஓவர்களிலும் தைரியமாக பேட்டிங் செய்துவரும் வீரர். ரிங்கு தனது சர்வதேச வாழ்க்கையில் ஒரு சிறந்த தொடக்கத்தைக் கொண்டிருந்தார், இருப்பினும் டி 20 போட்டிகளில் - அவரது சராசரி 89 மற்றும் 15 போட்டிகளில் 176 ஸ்ட்ரைக் ரேட் உள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தனது மனோபாவத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். தவிர, 26 வயதான அவர் மிகவும் திறமையான முதல் தர கிரிக்கெட் வீரர். 44 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் மற்றும் 20 அரைசதங்களுடன் 57.57 சராசரியுடன் 3109 ரன்கள் குவித்துள்ளார்.
வேற யாராவது இருக்காங்களா? என கேட்டால், இளம் வீரர் சாய் சுதர்சனும் ஒரு ஆப்ஷனாக இருக்கலாம். சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.
டாபிக்ஸ்