தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kane Williamson: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: நியூசி., அணி அறிவிப்பு

Kane Williamson: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: நியூசி., அணி அறிவிப்பு

Manigandan K T HT Tamil

Dec 17, 2023, 04:18 PM IST

google News
வில்லியம்சன் தனது கடைசி T20I போட்டியில் 2022 இல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். 2011 இல் 20 ஓவர் வடிவத்தில் அறிமுகமான பிறகு, 33 வயதான அவர் 85 T20I இன்னிங்ஸ்களில் விளையாடி 2464 ரன்கள் எடுத்தார். (AFP)
வில்லியம்சன் தனது கடைசி T20I போட்டியில் 2022 இல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். 2011 இல் 20 ஓவர் வடிவத்தில் அறிமுகமான பிறகு, 33 வயதான அவர் 85 T20I இன்னிங்ஸ்களில் விளையாடி 2464 ரன்கள் எடுத்தார்.

வில்லியம்சன் தனது கடைசி T20I போட்டியில் 2022 இல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். 2011 இல் 20 ஓவர் வடிவத்தில் அறிமுகமான பிறகு, 33 வயதான அவர் 85 T20I இன்னிங்ஸ்களில் விளையாடி 2464 ரன்கள் எடுத்தார்.

கேன் வில்லியம்சன் 20 ஓவர் ஆட்டத்தில் பங்கேற்று ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், வரவிருக்கும் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான நியூசிலாந்தின் டி20ஐ அணியை அவர் வழிநடத்த உள்ளார்.

வில்லியம்சன் தனது கடைசி T20I போட்டியில் 2022 இல் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். 2011 இல் 20 ஓவர் வடிவத்தில் அறிமுகமான பிறகு, 33 வயதான அவர் 85 T20I இன்னிங்ஸ்களில் விளையாடி 2464 ரன்கள் எடுத்தார்.

மறுபுறம், பங்களாதேஷுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடக்க வீரர் டெவோன் கான்வேக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் காரணமாக மைக்கேல் பிரேஸ்வெல், லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி மற்றும் ஹென்றி ஷிப்லி ஆகியோர் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்தின் முந்தைய டி20 தொடரை தவறவிட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம், அணியில் இடம் பிடித்தார். மறுபுறம், 25 வயதான பென் சியர்ஸும் சேர்க்கப்பட்டுள்ளார்.

"இந்த ஆண்டு நாங்கள் T20 கிரிக்கெட்டை பலவிதமான சூழ்நிலைகளில் விளையாடியுள்ளோம், மேலும் பரந்த அளவிலான கிரிக்கெட்டைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வீரர்கள் பங்களிப்பு செய்கிறார்கள்," என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் ESPNcricinfo-வில் தெரிவித்தார்.

"நாங்கள் எங்கள் திட்டமிடலில் முன்னேறியிருந்தாலும், இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை அணியில் மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்றோருடன் நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம்" ஸ்டெட் மேலும் கூறினார்.

T20I தொடரின் முதல் T20I போட்டி டிசம்பர் 27 அன்று நேப்பியரில் நடைபெறும். நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி டிசம்பர் 29 அன்று டவுரங்காவில் நடைபெறும், மூன்றாவது T20I டிசம்பர் 31 அன்று நடைபெறும்.

நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுதி.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி