தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Jasprit Bumrah: ஐசிசி விதிமீறலில் ஈடுபட்ட இந்திய பவுலர் பும்ரா! என்ன தண்டனை தெரியுமா?

Jasprit Bumrah: ஐசிசி விதிமீறலில் ஈடுபட்ட இந்திய பவுலர் பும்ரா! என்ன தண்டனை தெரியுமா?

Jan 29, 2024, 04:25 PM IST

google News
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டத்தின்போது பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. (AFP)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டத்தின்போது பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டத்தின்போது பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் 91 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற போதிலும் இந்தியா தோல்வியடைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தின் போது பும்ரா வெளிப்படுத்திய செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்த போது ஆட்டத்தின் 81வது ஓவரில், பேட் செய்து வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆலி போப் ஒரு ரன் எடுக்க முயற்சித்தபோது அவரை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார்.

தேவையில்லாமல் சக வீரருடன் உடல் தொடர்பை வெளிப்படுத்தி அவரை விளையாட விடாமல் தடுக்க முயற்சித்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

பும்ராவின் இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை என கூறப்பட்டாலும், அவரது சாதனையில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டது.

கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC நடத்தை விதியின் லெவல் 1ஐ மீறுபவர்களுக்கு குறைந்தபட்ச அபராதம், அதிகாரப்பூர்வ கண்டனம் மற்றும் அதிகபட்சமாக வீரரின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் குற்றம் சுமத்தப்பட்ட வீரருக்கு ஒன்று அல்லது இரண்டு குறைபாடு புள்ளிகள் வழங்கப்படும்.

பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் உள்ள டாக்டர். ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ சர்வதேச மைதானத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி