IPL Auction 2024: 'யாரும் எதிர்பார்க்கலை..': இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு வாங்கிய அணி!
Dec 19, 2023, 05:40 PM IST
கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி)க்காக "சராசரியாக" செயல்பட்டதைத் தொடர்ந்து, தான் விடுவிக்கப் பெறுவேன் என்று எதிர்பார்த்ததாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஒப்புக்கொண்டார்.
இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. முந்தைய சீசனில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தார் ஹர்ஷல் படேல்.
படேல் ஐபிஎல் 2024 ஏலத்தில் பணக்கார வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். இந்த சீசனில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலின் அடிப்படை விலை ரூ.2 கோடி. 2023 ஐபிஎல் சீசனில், ஆர்சிபியுடன் டி20 போட்டியில் ஹர்ஷல் பங்கேற்றார். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவரை 11.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி கைப்பற்றியது. ஏலத்தின் மீதான தனது எதிர்பார்ப்புகளைப் பற்றிப் பேசிய ஹர்ஷல் படேல், "சத்தியமாக, எனது கடைசி சீசன் சராசரியாக இருந்தது என்று நிர்வாகம் உணர்ந்திருக்கும் என்பதை நான் கூட உணர்ந்தேன். நான் அவர்கள் என்னை எவ்வளவு தொகைக்கு வாங்கினார்களோ அதற்கு நான் நியாயம் செய்யவில்லை என அவர்கள் உணர்ந்திருக்கலாம். அதனால், அவர்கள் என்னை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் RCB க்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டேன், அதனால் அதுவும் என்னைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று நினைத்தேன்" என்று கூறினார்.
"ஒவ்வொரு அணிக்கும் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் தேவை, குறிப்பாக டெத் ஓவர்களில் பந்து வீசக்கூடியவர்கள் தேவை. கடந்த ஆண்டு எனக்கு சிறந்த சீசன் இல்லை என்றாலும் நான் திறமையை இழந்துவிட்டேன் அல்லது தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. நான் நன்றாக செயல்பட்டால் எந்த சூழ்நிலையிலும் பந்துவீச முடியும் என்று உணர்கிறேன்." என்றார்.
"பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள், நான் அவர்களை மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன். ககிசோ ரபாடாவுடன், நான் டெல்லியில் 2-3 ஆண்டுகள் விளையாடி அவருடன் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறேன். வெளிப்படையாக, ஷிகர் தவனுடன், நான் ஒரு சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறேன். எனவே, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம்" என்று ஹர்ஷல் மேலும் கூறினார்.
டாபிக்ஸ்