தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl Auction 2024: டிஎன்பிஎல்-இல் கலக்கிய ஷாருக்கை எடுக்க போட்டிப் போட்ட பஞ்சாப், குஜராத்!-இறுதியில் யாருக்கு வெற்றி?

IPL Auction 2024: டிஎன்பிஎல்-இல் கலக்கிய ஷாருக்கை எடுக்க போட்டிப் போட்ட பஞ்சாப், குஜராத்!-இறுதியில் யாருக்கு வெற்றி?

Manigandan K T HT Tamil

Dec 19, 2023, 05:56 PM IST

google News
IPL Auction 2024 Live: ஷாருக்கானை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் மிகவும் விரும்பியது. ஆனால், இறுதியில் ஏலத்தில் அதிக தொகையை குறிப்பிட்ட குஜராத் அவரை வாங்கியது. (@gujarat_titans)
IPL Auction 2024 Live: ஷாருக்கானை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் மிகவும் விரும்பியது. ஆனால், இறுதியில் ஏலத்தில் அதிக தொகையை குறிப்பிட்ட குஜராத் அவரை வாங்கியது.

IPL Auction 2024 Live: ஷாருக்கானை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் மிகவும் விரும்பியது. ஆனால், இறுதியில் ஏலத்தில் அதிக தொகையை குறிப்பிட்ட குஜராத் அவரை வாங்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஷாருக் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஷாருக் கானின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் தான். ஆனால், எடுத்தவுடனேயே பஞ்சாப் கிங்ஸ் இவருக்கு ரூ.40 லட்சத்தில் எடுக்க விருப்பம் தெரிவித்தது.

உடனடியாக குஜராத் டைட்டன்ஸ் அணி அவரது ஏலத் தொகையை அதிகப்படுத்தியது. இவ்வாறாக அடுத்தடுத்து ஏலத் தொகை ஏறிக் கொண்டே சென்றது. ஆனால், அவரை விட்டுக் கொடுக்காமல் முட்டி மோதியது குஜராத் டைட்டன்ஸ். இறுதியில் ரூ.7.40 கோடிக்கு மேல் பஞ்சாப் கிங்ஸ் ஏலத் தொகையை குறிப்பிடவில்லை. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் தமிழக வீரரை எடுத்தது.

ஷாருக் கான், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர் ஆவார். அவர் மீதான எதிர்பார்ப்பு இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகம் இருந்தது. சென்ற சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் முத்திரை பதித்தார். அதேபோல், ஷாருக் கானும் முத்திரை பதிப்பார் என நம்பலாம்.

முன்னதாக, துபாயில் 2024 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆஸ்திரேலிய கேப்டனுக்காக ரூ 20.5 கோடியை செலுத்தியபோது, இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்தார். ஆனால் அவரது சாதனை ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று கம்மின்ஸ் கூட அறிந்திருக்கமாட்டார். ஏனெனில் சக ஆஸ்திரேலியா அணி வீரரான மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு அந்தச் சாதனையை முறியடித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ. 24.75 கோடிக்கு அவர் வாங்கப்பட்டார். மிட்செல் ஸ்டார்க் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனுடன் தற்போது இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். மிட்செல் ஸ்டார்க்கை குஜராத் டைட்டன்ஸ் வாங்க தீவிர முயற்சி எடுத்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் ஏலத்தில் முட்டி மோதியது என்று கூட சொல்லலாம். ஆனால், இறுதியில் கொல்கத்தா நைர் டைரஸ் அணிக்கு லக் அடித்தது.

கம்பீர் அணி நிர்வாகத்திற்கு கொடுத்த யோசனையின் முடிவில் இந்தத் தொகைக்கு மிட்செல் ஸ்டார்க்கை அந்த அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐபிஎல் 2024 ஏலத்தில் விற்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை ரூ. 1 கோடி அடிப்படை விலையாக வைத்திருந்த பவல் பெற்றார். Rilee Rossouw ஐ எடுப்பவர்கள் இல்லை, ஆனால் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு DC கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்கு மற்றொரு ஏலப் போர் நடந்தது. இறுதியாக, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் ஹீரோவான டிராவிஸ் ஹெட், SRH க்கு ரூ.6.8 கோடிக்கு வாங்கப்பட்டார். அவரது அடிப்படை ஏல விலை ரூ. 2 கோடியாகும்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை