தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl Auction 2024: ஐபிஎல் 2024 ஏலம் விடுபவர் யார் தெரியுமா?-மேலும் சுவாரசியத் தகவல்கள் இதோ

IPL Auction 2024: ஐபிஎல் 2024 ஏலம் விடுபவர் யார் தெரியுமா?-மேலும் சுவாரசியத் தகவல்கள் இதோ

Manigandan K T HT Tamil

Jan 06, 2024, 03:33 PM IST

google News
இந்தியன் பிரீமியர் லீக் 14 (ஐபிஎல்) ஏலத்திற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது, இந்த முறை புகழ்பெற்ற சர்வதேச வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன. (@IPL)
இந்தியன் பிரீமியர் லீக் 14 (ஐபிஎல்) ஏலத்திற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது, இந்த முறை புகழ்பெற்ற சர்வதேச வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் 14 (ஐபிஎல்) ஏலத்திற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது, இந்த முறை புகழ்பெற்ற சர்வதேச வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது ஏலம் துபாயில் உள்ள கோகோ-கோலா அரங்கில் செவ்வாய்கிழமை (டிசம்பர் 19) நடைபெற உள்ளது, அப்போது 77 வீரர்கள் வரை உரிமையாளர்களால் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தமுறை தான் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடத்தப்படுகிறது.  10 அணிகளுக்கு 77 இடங்களை நிரப்ப இந்த ஏலம் நடத்தப்படுகிறது.

214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு நட்சத்திரங்கள், அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட மொத்தம் 333 வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் பெயர்களை கொடுத்துள்ளனர். நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

கடந்த இரண்டு பதிப்புகளில் பெண்கள் பிரீமியர் லீக் ஏலம் விடுபவரா இருந்த மல்லிகா சாகர், ஐபிஎல் 2024 ஏலத்தில் எட்மீட்ஸுக்குப் பதிலாக நடத்தவுள்ளார்.

மல்லிகா சாகர் யார்?

அவர் மும்பையை தளமாகக் கொண்ட கலைப் பொருட்கள் சேகரிப்பாளர் ஆவார். நவீன மற்றும் சமகால இந்திய கலைக்கான ஆலோசகராகவும் உள்ளார். 2023 ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தின் போது இந்திய டி20 லீக்கில் ஏலத்தை நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற 48 வயதான அவர், முன்னதாக புரோ கபடி லீக் (பிகேஎல்) ஏலத்தையும் நடத்தியுள்ளார். அவர் 2021 இல் PKL ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

ஏலத்தை எதில் காணலாம்?

ஐபிஎல் ஏலம், ஸ்டார் ஸ்போட்ர்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் காணலாம்.  

2024 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பணம் உள்ளது?

குஜராத் டைட்டன்ஸ் (ரூ 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ. 14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர் ஆவார்.

ஆப்கானிஸ்தானின் 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்திற்கான தேர்வுப்பட்டியலில் மிகவும் வயதான வீரர் ஆவார்.

 

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி