HBD Sneh Rana: இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர்! ஒரு முறை கூட டக் அவுட் ஆகாத வீராங்கனை
Feb 18, 2024, 06:20 AM IST
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங் ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஸ்நேக் ராணா, பல போட்டிகளில் மேட்ச் வின்னராகவும் இருந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்நேக் ராணா இந்திய மகளிர் டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் விளையாடி வரும் வீராங்கனையாக இருந்து வருகிறார். சிறந்த பவுலிங் ஆல்ரவுண்டர்களின் ஒருவரான இவர் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை ஆஃப் பிரேக் பவுலராகவும் உள்ளார்.
முதன் முதலில் மகளிர் ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் 2014ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
2016இல் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஒதுக்கப்பட்ட ஸ்நேக் ராணா, 5 ஆண்டுகள் கழித்து கம்பேக் கொடுத்தார். இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட காலகட்டத்தில் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்த ஸ்நேக் ராணா, அங்கு சிறப்பாக செயல்பட்டதன் பலனமாக தேசிய அணிக்கு திரும்பினார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் லோயர் ஆர்டரில் பேட் செய்யும் இவர், பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிக்கும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்தும், பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் திருப்புமுனையும் ஏற்படுத்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது, ஒரி நாள் கிரிக்கெட்டில் 7வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது, அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தியது, டி20 கிரிக்கெட்டில் விளையாடியிருக்கும் இன்னிங்ஸில் இதுவரை டக் அவுட்டாகாமல் இருப்பது என சில சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஸ்நேக் ராணா உள்ளார்.
மகளிர் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்நேக் ராணா, தற்போதைய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சுழல் ராணிகளில் ஒருவராகவும், தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராகவும் ஜொலித்து வருகிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் மேட்ச் வின்னர்களின் ஒருவரான ஸ்நேக் ராணாவுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்