India vs Srilanka Live Score: இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா! முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி
Nov 02, 2023, 09:02 PM IST
India vs Srilanka World Cup 2023 Live Score: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா-இலங்கை அணிகள் மோத உள்ளன. அந்த போட்டி தொடர்பான அனைத்து அப்டேட் விபரங்களையும் இங்கு காணலாம்.
இந்தியா அரையிறுதிக்கு தகுதி
இந்தியா விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது
முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு
வெறும் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. இதன் மூலம் 303 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி
இலங்கை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது ஷமி. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகியுள்ளார் முகமது ஷமி
ஐந்து பேர் டக் அவுட்
இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரும் டக்அவுட் ஆகியுள்ளனார். இதுவரை ஐந்து பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளனர்
மேத்யூஸ் அவுட்
இலங்கை அணியில் நிதானமாக பேட் செய்து வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்கள எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் போல்டாகி வெளியேறினார். 29 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது
பவர்ப்ளே முடிவில் 14 ரன்கள்
இலங்கை பவர்ப்ளே முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் பவர்ப்ளே ஓவரில் எடுக்கப்பட்ட மிகவும் குறைவான ஸ்கோராக இது அமைந்துள்ளது
பந்து வீசிய முதல் ஓவரிலேயே ஷமி 2 விக்கெட்டுகள்
பவுலிங் செய்ய வந்த முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது ஷமி. இலங்கை அணி 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது
இலங்கை அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகள்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இலங்கை அணிக்கு எதிராக 6 போட்டிகள் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 7.10 எனவும், எகானமி 3.58ஆக உள்ளது
பவர்ப்ளே ஓவர்களில் சிராஜ் 37 விக்கெட்டுகள்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பவர்ப்ளே ஓவர்களில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 18.16 எனவும், எகானமி 4.44 என உள்ளது
நான்காவது விக்கெட்டை இழந்த இலங்கை
இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ். ஒரு ரன் எடுத்திருந்த அவர் முகமது சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது சிராஜ். பார்மில் இருக்கும் கருணரத்னே, சமரவிக்ரமா ஆகியோர் டக் அவுட் ஆகியுள்ளனர்
ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்
இலங்கை இன்னிங்ஸில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஓபனிங் பேட்ஸ்மேன் நிஸ்ஸங்கா டக் அவுட் ஆகி வெளியேறினார். பும்ரா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்
சதமில்லாமல் 350+ ஸ்கோர் அடித்த இந்தியா
இந்திய அணியில் யாரும் சதம் அடிக்காத போதிலும் 357 ரன்கள் குவித்துள்ளது. இது கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அடித்த 348 ரன்களை விட அதிகமாகும்
அதிக விக்கெட்டுகள் - முதலிடம் பிடித்த மதுஷங்கா
உலகக் கோப்பை 2023 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில், 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா முதலிடம் பிடித்துள்ளார்
கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள்
இந்தியா கடைசி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது
இலங்கை அணிக்கு 358 ரன்கள் இலக்கு
50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி வெற்றி பெர 358 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டும்
5 விக்கெட்டுகளை வீழ்த்திய மதுஷங்கா
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யாகுமார் ஆகியோரின் விக்கெட்டுகளை இலங்கை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கா வீழ்த்தினார்
ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்
56 பந்துகளில் 82 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் மதுஷங்கா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்
45 ஓவரில் ரன்கள் 304 ரன்கள்
இந்தியா 45 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 59, ஜடேஜா 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்
அரைசதமடித்த ஷ்ரேயாஸ்
தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்
சூர்யகுமார் யாதவ் அவுட்
12 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், ஆட்டத்தின் 41.3 ஓவரில் அவுட்டானார். மதுஷங்கா வீசிய பந்தில் மெண்டிஸ் பிடித்த கேட்ச் ரிவியூ செய்யப்பட்ட நிலையில், சூர்யாகுமார் யாதவ் அவுட் என மூன்றாம் நடுவர் தீர்ப்பு அளித்தார்
கேஎல் ராகுல் அவுட்
ஆட்டத்தின் 39.2 ஓவரில் கேஎல் ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சமீரா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்
38.2 ஓவரில் 250 ரன்கள்
இந்திய அணி அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், 38.2 ஓவரில் 250 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் 33, கேஎல் ராகுல் 20 ரன்கள் அடித்து விளையாடி வருகின்றனர்
35 ஓவரில் 225 ரன்கள்
இந்திய அணி 35 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 20, கேஎல் ராகுல் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்
கோலி - கில் 189 ரன்கள் பார்ட்னர்ஷிப்
சுப்மன் கில் - விராட் கோலி இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இருவரும் சதத்தை மிஸ் செய்துள்ள நிலையில் கில் 92, விராட் கோலி 88 ரன்கள் எடுத்து அவுட்டாகியுள்ளனர்
சதத்தை மிஸ் செய்த கோலி
88 ரன்கள் எடுத்த நிலையில் மதுஷங்கா வீசிய ஸ்லோ பந்தில் விராட் கோலி கவர்ஸில் ட்ரைவ் ஆட முயற்சித்து அவுட்டானார். கோலி தனது 49வது சதத்தை மிஸ் செய்துள்ளார்.
கில் அவுட்
சிறப்பாக பேட் செய்து ரன்குவித்து வந்த சுப்மன் கில் 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த நிலையில் மதுஷங்கா பந்தில் தனது விக்கெட்டை தவறவிட்டார்
30 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது
முதல் சிக்ஸரை பறக்கவிட்ட கில்
ஆட்டத்தின் 27.3 ஓவரில் இன்றைய ஆட்டத்தின் முதல் சிக்ஸரை பறக்கவிட்டார் சுப்மன் கில். சமீரா ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்தார். கில் 75 ரன்களுடன் விளையாடி வருகிறார்
25 ஓவரில் 151 ரன்கள்
25 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளனர். சுப்மன் கில் 65, விராட் கோலி 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்
20 ஓவரில் இந்திய 120 ரன்கள்
20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. கில் 55, கோலி 58 ரன்களுடன் பேட் செய்து வருகின்றனர்
கில் அரைசதம்
சிறப்பாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த சுப்மன் கில் அரைசதமடித்தார். ஆட்டத்தின் 18.3 ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்
கோலி அரைசதம்
50 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 16.1 ஓவரில் கோலி 50 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் இந்திய அணி ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 102 என உள்ளது
பிரதான பவர்ப்ளேயில் கலக்கி வரும் இந்தியா
உலகக் கோப்பை 2023 தொடரின் பவர்ப்ளே ஓவர்களில் இந்தியா சராசரி 50.37 என உள்ளது. 6.01 ரன் ரேட்டுடன் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது
பவர்ப்ளே முடிவில் இந்தியா ஆதிக்கம்
பிரதான பவர்ப்ளே முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 28, சுப்மன் கில் 26 ரன்களுடன் களத்தில் உள்ளனர்
ரோஹித் போல் கோலியும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் சிக்கல்
ரோஹித் ஷர்மா போல் விராட் கோலியும் இடது கை பந்து வீச்சாளர்களிடம் 34 முறை அவுட்டாகியுள்ளார். அவரது சராசரி 46.52, ஸ்டிரைக் ரேட் 96.99 ஆக உள்ளது
தப்பித்த கோலி
ஆட்டத்தின் 5.2 ஓவரில் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இலங்கை பவுலர் சமீரா. விராட் கோலி அப்போது 10 ரன்கள் எடுத்திருந்தார்
பவுண்டரியுடன் முதல் ரன் அடித்த கில்
முதல் ரன் அடிக்க 8 பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில், பவுண்டரியுடன் ரன் வேட்டையை தொடங்கியுள்ளார்
இடது கை பந்து வீச்சாளரிடம் 34 முறை சிக்கிய ரோஹித்
ரோஹித் ஷர்மா இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தில் 34 முறை அவுட்டாகியுள்ளார். அவரது சராசரி 47.55, ஸ்டிரைக் ரேட் 87. 88 என உள்ளது
ரோஹித் ஷர்மா அவுட்
ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரியுடன் ரோஹித் ஷர்மா தொடங்கிய நிலையில், இரண்டாவது பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான மதுஷங்கா அவரது விக்கெட்டை வீழ்த்தினார்
சச்சின் டென்டுல்கர், முத்தையா முரளதரன் வருகை
போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் பாடும் நிகழ்வில் இந்தியா, இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களான சச்சின் டென்டுல்கர், முத்தையா முரளிதரன் ஆகியோர் அணிகளுடன் சேர்ந்து வந்தனர்
இலங்கை அணியில் ஒரு மாற்றம்
இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் தனஞ்ஜெயா டி சில்வாவுக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் துஷன் ஹேமந்தா சேர்க்கப்பட்டுள்ளார்
இலங்கை பவுலிங் தேர்வு
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்
சிறிய பவுண்டரிகள்
போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் இரு சைடுகளிலும் பவுண்டரி அளவு முறையே 64, 69 மீட்டர்களாக உள்ளன. ஸ்டெரியிட் பவுண்டரி 76 மீட்டராக உள்ளன
ரோகித் சர்மா பேச்சு
India vs Srilanka Live Score Updates: சிலநேரங்களில் எல்லாம் உங்களுக்கு சாதமாக நடக்கும். சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். நீங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால், அனிஅவரும் என்னை சரியான கேப்டன் இல்லை என்று கூறுவர். அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்ய வேண்டும் - இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா
2 முறை வெளியேற்றிய இலங்கை!
India vs Srilanka Live Score Updates: 1996 உலகக் கோப்பை காலிறுதி, 2007 உலகக் கோப்பை லீக் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவை தொடரை வெளியேற்றிய அணியாக இலங்கை உள்ளது.
சமபலத்துடன் இலங்கை!
India vs Srilanka Live Score Updates: உலகக் கோப்பை தொடரில் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 முறை இலங்கை. 4 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் போயுள்ளது.
அதிக ஸ்கோர் செல்ல வாய்ப்பு
India vs Srilanka Live Score Updates: அதிக ஸ்கோர் அடிக்கும் ஆடுகளமாக இன்றைய போட்டியும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை 35 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் வாட்டி வதைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுகளம் எப்படி?
India vs Srilanka Live Score Updates: ரன் வேட்டை நடத்துக்கூடிய ஆடுகளமாக இருந்து வரும் வான்கடே மைதானத்தில் தென் ஆப்பரிக்கா அணி விளையாடி இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்து 350+ ஸ்கோரை பதிவு செய்தது.
வெற்றியை தடுப்பாரா வெல்லலகே?
India vs Srilanka Live Score Updates: கடந்த மாதம் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பவுலிங்கில் கலக்கிய வெல்லலகே இந்திய பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது
தாக்கம் ஏற்படுத்தாத தனஞ்ஜெய டி சில்வா
India vs Srilanka Live Score Updates: ஆல்ரவுண்டர் தனஞ்ஜெய டி சில்வா இதுவரை பவுலிங்கில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செய்லபடும் அவரது ஆட்டமும் கவனிக்க வைக்கும்.
3 முறை டக் அவுட் ஆன ரோஹித்
India vs Srilanka Live Score Updates: மேத்யூஸ் ரோஹித் ஷர்மாவை 7 முறை அவுட் ஆக்கி உள்ளார். இதில் 3 முறை டக் அவுட்டாகும்.
ரோஹித்தை மிரட்டும் மதுஷங்கா!
India vs Srilanka Live Score Updates: இடது கை பவுலர்களை எதிர்கொள்ள திணறும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, மதுஷங்கா ஆகியோரில் யார் சாதிப்பார் என்பது எதிர்பார்ப்பாகவே உள்ளது.
தலைவலி தரும் பௌலர்
India vs Srilanka Live Score Updates: இடது கை வேகப்பந்து வீச்சாளரான மதுஷங்கா வலது கை பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியை தரும் பவுலராக இருந்து வருகிறார்
பௌலிங்கில் ஜொலிக்கும் ரஜிதா!
India vs Srilanka Live Score Updates:இதுவரை சதீர சமரவிக்ரமா, நிஸ்ஸாங்க, குசால் மெண்டில் பேட்டிங்கிலும், மதுஷங்கா, ரஜிதா ஆகியோர் பவுலிங்கில் ஜொலித்து வருகின்றனர்
இந்தியாவுக்கு எதிராக சிறப்பான பௌலிங்!
India vs Srilanka Live Score Updates: இந்தியாவுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக இருந்து வந்துள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ்.
ஏஞ்சலோ மேத்யூஸ் வருகை கூடுதல் பலம்!
India vs Srilanka Live Score Updates: அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வருகை இலங்கை அணி பேட்டிங், பவுலிங் ஆகிவற்றுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
காத்திருக்கும் சவால்கள்!
India vs Srilanka Live Score Updates: உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. முதல் 5 போட்டியில் சேஸிங்கில் ஜெயித்த இந்தியா, கடைசி போட்டியில் முதலில் பேட் செய்து வெற்றி பெற்றது. அனைத்து வித சவால்களையும் எதிர்கொண்டு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அணியாக இருந்து வருகிறது.
இலங்கையின் உத்தேச அணி பட்டியல்!
India vs Srilanka Live Score Updates: இலங்கை அணியின் உத்தேச பட்டியல்: பதும் நிசாங்கா, கருணரத்னே, குசல் மெண்டீஸ் (கேப்டன்), சமரவிக்ரமா, அசலங்கா, மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, வெல்லாலகோ, கசுன் ரஜிதா, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, துஷ்மந்தா சமீரா
இந்திய உத்தேச அணி பட்டியல்!
India vs Srilanka Live Score Updates: இந்திய அணியின் உத்தேசப்பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்), சுபன் கில், வீராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
பதிலடி தருமா இலங்கை
India vs Srilanka Live Score Updates: கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தி இந்தியாவிடம் இலங்கை தோற்ற நிலையில், தோல்விக்கு பதில் அடி தர இலங்கை முயலும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
எளிதாக வெல்ல முடியாத அணி
India vs Srilanka Live Score Updates: 2007 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாத அணியாக இலங்கை உள்ளது.
பெயர் சொல்லும் வீரர்கள் இல்லை
India vs Srilanka Live Score Updates: இலங்கை அணியில் பேட்டிங், பந்துவீச்சில் பெயர் சொல்லும் அளவுக்கு தேர்ந்த வீரர்கள் இல்லாதது குறையாக உள்ளது
இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
India vs Srilanka Live Score Updates: இலங்கைக்கு எஞ்சி உள்ள 3 போட்டிகளில் தொடர்ந்து வென்றால் மட்டுமே அரையிறுதி கனவை நினைத்து பார்க்க முடியும்
இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை
India vs Srilanka Live Score Updates: நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளை இலங்கை வீழ்த்தி உள்ளது.
தொடர் தோல்வி
India vs Srilanka Live Score Updates: தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்துள்ளது.
வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி
India vs Srilanka Live Score Updates: இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி வெறும் 2 போட்டியில் மட்டுமே இலங்கை வென்றுள்ளது
பந்துவீச்சில் அபாரம் காட்டும் பௌலர்கள்!
India vs Srilanka Live Score Updates: பந்துவீச்சில் ஜஸ்பிர்த் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது
ஷாட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள திணறும் ஸ்ரேயாஸ் ஐயர்
India vs Srilanka Live Score Updates: ‘ஷாட்’ பிட்ச் பந்துகளில் விக்கெட்டுகளை இழக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பலவீனத்தை சரி செய்ய வலைபயிற்சியின்போது ‘ஷாட் பிட்ச்’ பந்து வீட்டை அதிக நேரம் எதிர்கொண்டு பயிற்சி எடுத்துள்ளார்.
தலா ஒரு அரை சதம்
India vs Srilanka Live Score Updates: சுப்மன் கில், ஸ்ரேயார் ஐயர் இதுவரை ஒரு அரைசதம் அடித்துள்ளனர்.
இதுவரை 354 ரன்களை குவித்துள்ள கோலி
India vs Srilanka Live Score Updates: வீராட் கோலி இதுவரை ஒரு சதம் 3 அரை சதங்கள் உடன் 354 ரன்கள் குவித்துள்ளார்
398 ரன்களுடன் ரோகித் முன்னிலை
India vs Srilanka Live Score Updates: இந்திய அணியில் பேட்டிங்கில் இதுவரை கேப்டன் ரோகித் சர்மா ஒரு சதம், 2 அரை சதங்கள் உடன் 398 ரன்கள் குவித்துள்ளார்
அரையிறுதியை எட்டலாம்
Worldcup 2023: தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வியை காணாத இந்தியா இந்த தொடரில் வென்றால் அரையிறுதியை அதிகாரப்பூர்வமாக எட்டிவிடும்
ரோஹித்-கோலி நம்பிக்கை
India vs Srilanka Live Score Updates: இந்த தொடரில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான பேட்டிங் செய்து வருவது, இந்திய அணிக்கு பலம்.
பலவீனமான இலங்கை
India vs Srilanka Live Score Updates: கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை தழுவி பலவீனமான நிலையில் இலங்கை அணி உள்ளது.
இந்தியாவின் முழு பலம்
India vs Srilanka Live Score Updates: தொடர் வெற்றிகளால் உற்சாகமாகவும், பலமாகவும் இருக்கும் இந்திய அணி, இன்று வெற்றியை தொடர முயற்சிக்கும்.
இன்று இந்தியா-இலங்கை மோதல்
India vs Srilanka Live Score Updates: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது