Srilanka Lowest Scores in ODI: இலங்கை அணி ODI இல் இதற்கு முன் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் என்னென்ன?
Sep 17, 2023, 05:41 PM IST
Asia Cup 2023: இலங்கை அணி இதற்கு முன் ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்திருக்கிறது.
இலங்கை அணி, ஆசிய கோப்பை பைனலில் மோசமான ரெக்கார்டை இன்று பதிவு செய்தது. இதற்கு முன்பு ஒரு நாள் கிரிக்கெட்டில் 2012ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்களில் சுருண்டது.
அடுத்து தற்போது 50 ரன்களில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சரணடைந்தது. 1986இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஓர் ஆட்டத்திலும் குறைந்தபட்ச ஸ்கோரை இலங்கை பதிவு செய்துள்ளது. அந்த ஆட்டத்தில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் எடுத்தது.
2014இல் 67 ரன்களில் ஒரு ஆட்டத்தில் சுருண்டு இருக்கிறது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய அணியின் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களில் சுருண்டது. இந்தியா 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.
மழை காரணமாக போட்டி திட்டமிட்டப்படி 3 மணிக்குத் தொடங்காமல் 3.40 மணிக்கு தொடங்கியது. முதல் ஓவரிலேயே பும்ரா ஒரு விக்கெட்டை சாய்த்தார். குசால் பெரோரா கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். பின்னர் அடுத்த ஓவரில் முகமது சிராஜ் வீசிய பந்தை அடிக்க முயன்ற நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார்.
4வது ஓவரை சிராஜ் வீசினார். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பதும் நிசாங்கா 2 ரன்களிலும், குசால் பெரேரா ரன்கள் இன்றியும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சதீரா, சரித் அசலங்கா ஆகியோர் டக் அவுட்டாகினர்.
தனஞ்செய டி சில்வா 4 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். தற்போது குசால் மெண்டிஸும், கேப்டன் ஷனகாவும் விளையாடினர்.
அடுத்து ஓவரில் ஷனகாவின் விக்கெட்டையும் சாய்த்தார் சிராஜ். இதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இத்தனை விக்கெட்டுகளை சாய்த்த வீரர் ஆனார் சிராஜ்.
இவ்வாறாக சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மென்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக ஹேமந்தா 13 ரன்களை எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் சென்றனர்.
இவ்வாறாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. 51 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் நமது அணி விளையாடவுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்