தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு இன்று ஸ்பெஷல் டே.. ஏன் தெரியுமா?

Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு இன்று ஸ்பெஷல் டே.. ஏன் தெரியுமா?

Manigandan K T HT Tamil

Sep 17, 2023, 02:41 PM IST

google News
Asia Cup 2023: இன்றைய போட்டியிலும் ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், ரோகித் சர்மாவுக்கு இந்த நாள் மறக்க முடியாததாக மாறும்.
Asia Cup 2023: இன்றைய போட்டியிலும் ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், ரோகித் சர்மாவுக்கு இந்த நாள் மறக்க முடியாததாக மாறும்.

Asia Cup 2023: இன்றைய போட்டியிலும் ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், ரோகித் சர்மாவுக்கு இந்த நாள் மறக்க முடியாததாக மாறும்.

இந்தியா-இலங்கை இடையே ஆசிய கோப்பை பைனல் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 250வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாகும்.

பல வெற்றிகளை அணிக்கு தேடித்தந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அந்த வகையில் இன்றைய ஆட்டம் ஸ்பெஷல் டே ஆகும்.

இன்றைய போட்டியிலும் ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், ரோகித் சர்மாவுக்கு இந்த நாள் மறக்க முடியாததாக மாறும்.

இந்தியா, இலங்கை இடையேயான பைனல் போட்டிக்கு 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் ஜெயித்த இலங்கை, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா ஃபீல்டிங் செய்யவுள்ளது.

முந்தைய வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங்கில் இந்தியா தோற்றது நினைவுகூரத்தக்கது. அதை இன்று மாற்றும் என எதிர்பார்க்கலாம். மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாககக் கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்காலம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசியக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

ஆசிய கோப்பை 2023 போட்டித் தொடரில் இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது. இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் இரு அணிகளும் அபாரமான ஃபார்மில் இருப்பதால் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன. இந்த போட்டியின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி களமிறங்குகிறது. மறுபுறம், இலங்கை தனது கடைசி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பை 2023 போட்டித் தொடரில் இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது.

இலங்கையும் இதேபோல் தான். இந்தியாவுக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்து வெற்றிகரமான அணியாக பைனலுக்கு முன்னேறியிருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி