IND vs SA 3rd ODI match prediction: இன்றைய போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு, வானிலை எப்படி இருக்கும்?
Dec 21, 2023, 12:54 PM IST
India vs South Africa 3rd ODI: பார்லில் உள்ள யூரோலக்ஸ் போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதுகிறது.
தென்னாப்பிரிக்காவின் பார்லில் உள்ள யூரோலக்ஸ் போலன்ட் பார்க்கில் இன்று அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவே கடைசி போட்டியாகும். டிசம்பர் 17 அன்று, வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வென்றது. டிசம்பர் 19 அன்று, தென்னாப்பிரிக்கா இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியாவுக்கு கே.எல் ராகுல் தலைமை தாங்குகிறார், தென்னாப்பிரிக்காவை எய்டன் மார்க்ரம் வழிநடத்துகிறார்.
இதுவரை நேருக்கு நேர் மோதல்
இந்த அணிகள் இதுவரை 93 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா 51 ஆட்டங்களிலும், இந்தியா 39 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் எந்த முடிவும் இல்லை. இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஃபேன்டஸி அணி
கே.எல். ராகுல் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), டேவிட் மில்லர், ரின்கு சிங், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், கேசவ் மகராஜ், யுஸ்வேந்திர சாஹல், தப்ரைஸ் ஷம்சி, அர்ஷ்தீப் சிங்
பிட்ச் ரிப்போர்ட்
பார்ல் மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இருக்கும் மற்றும் அதிக ஸ்கோரை எட்ட வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூரோலக்ஸ் போலண்ட் பார்க் மைதானத்தில் சராசரி ஸ்கோர் 250 ஆகும்.
இந்த மைதானத்தில் இதுவரை 15 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி 8 முறையும், சேசிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்று டை ஆனது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி இங்கு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியாகும்.
வானிலை
மழைக்கு வாய்ப்பு இல்லாததால் பார்லில் வெயில் அடிக்கும். ஈரப்பதம் 43% குறைவாக இருக்கும். மாலை 4:30 மணிக்கு போட்டி தொடங்கும் போது வெப்பநிலை சுமார் 34 டிகிரியாக இருக்கும். இது இரவில் 22-23 டிகிரிக்கு கணிசமாகக் குறையும் என வானிலை நிலவரம் தெரிவிக்கிறது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா வெற்றி கணிப்பு
கூகுளின் வெற்றி நிகழ்தகவின்படி, தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 53% வாய்ப்பு உள்ளது.
CricTracker கருத்து படி, யார் முதலில் பேட்டிங் செய்தாலும், போட்டியில் இந்தியா வெற்றி பெறும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என Mykhel தெரிவித்துள்ளது.