India vs South Africa 1st ODI: சர்வதேச ODI இல் அறிமுகமான தமிழக இளைஞர்!
Dec 17, 2023, 01:52 PM IST
India vs South Africa toss report: நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இன்றைய பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்தார்.
தென்னாப்பிரிக்காவின் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
22 வயதான பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு கேப்டன் கே.எல் ராகுல் தொப்பியை வழங்கினார். இதற்கிடையில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னாப்பிரிக்கா இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறது.
இரண்டு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரை கைப்பற்றும், T20I தொடரைப் போலல்லாமல், முதல் ஆட்டம் மழையால் ரத்தானதால் டிராவில் முடிந்தது.
டாஸ் நேரத்தில் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நன்கு பரிட்சையமான களம், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம், நாங்கள் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுகிறோம். இது ஒரு அருமையான நாள். நம்பிக்கையுடன், இருக்கிறோம்." என்றார்.
KL ராகுல் கூறுகையில், "சாய் சுதர்சன் இன்று அறிமுகமாகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவர். சஞ்சு எப்பொழுதும் உற்சாகமாக இருக்கிறார்" என்றார்.
தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்): ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.
இந்தியா (பிளேயிங் லெவன்): கே.எல்.ராகுல்(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.