தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng Toss Report: பட்டையை கிளப்ப காத்திருக்கும் இந்தியா.. பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

IND vs ENG Toss Report: பட்டையை கிளப்ப காத்திருக்கும் இந்தியா.. பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

Manigandan K T HT Tamil

Sep 30, 2023, 01:51 PM IST

google News
ரோகித் சர்மா இன்றைய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார். (@CricCrazyJohns)
ரோகித் சர்மா இன்றைய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.

ரோகித் சர்மா இன்றைய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

டாஸ் ஜெயித்த இந்தியா, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 2 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமிராஜ், முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி

டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.

2023-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, கடந்த சீசனில் ரன்னர்-அப் ஆன நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2023 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர், உலகக் கோப்பையின் 13வது எடிஷன் ஆகும். 

இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்பாடு செய்யப்படும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியாகும். இது இந்தியாவில் இந்த முறை நடத்தப்படுகிறது. 

இது முதலில் பிப்ரவரி முதல் மார்ச் 2023 வரை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 2019 நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து இந்த போட்டியை நடத்திய இந்தியா, இம்முறை முழுமையாக தனித்து நடத்தும் முதல் ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை இதுவாகும். 

இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நவம்பர் 19, 2023 அன்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானங்களில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த எடிஷனின் டேக்லைன் "It takes one day" என்பதாகும். முதலில், இந்த போட்டி 2023 பிப்ரவரி 9 முதல் மார்ச் 26 வரை நடைபெறுவதாக இருந்தது. கோவிட்- 19 காரணமாக போட்டி அட்டவணை உருவாக்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு மாற்றப்படும் என்று ஜூலை 2020-இல் அறிவிக்கப்பட்டது. ஐசிசி போட்டி அட்டவணையை 27 ஜூன் 2023 அன்று வெளியிட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி