தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  U19 World Cup Final:’ ஆஸி.யை பழித்தீர்க்குமா இந்தியா!’ இன்று ஜுனியர் உலக்கோப்பை பைனல்!

U19 World Cup Final:’ ஆஸி.யை பழித்தீர்க்குமா இந்தியா!’ இன்று ஜுனியர் உலக்கோப்பை பைனல்!

Kathiravan V HT Tamil

Feb 11, 2024, 09:58 AM IST

google News
”கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ஜுனியர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது” (PTI)
”கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ஜுனியர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது”

”கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ஜுனியர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது”

ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

15வது ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது.  இறுதிப்போட்டிக்கு தயாராகி உள்ள இரண்டு அணிகளும் இதுவரை எந்த லீக் சுற்றிலும் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. சூப்பர் -6 கட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் மட்டும் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை அதே நேரத்தில் மற்ற அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

குரூப் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. சூப்பர் சிக்ஸர் சுற்றில் நியூசிலாந்தை 214 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 132 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வீழ்த்தியது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.   

நடப்பு சாம்பியனான இந்திய அணி 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்ற இந்தியா தீவிரமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவின்,  பெனோனியில் உள்ள சஹாரா பார்க் வில்லோமூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்  இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு டாஸ் போடப்படுகிறது.

இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக காண முடியும். மேலும் ஹாட் ஸ்டாரில் நேரடி ஸ்ட்ரீமிங் மூலமமும் பார்க்கலாம்.  

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ஜுனியர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி