பவுலிங்கில் மிரட்டிய பும்ரா, சிராஜ்.. 4 நாளில் முடிவுக்கு வந்த முதல் டெஸ்ட், இந்தியா வெற்றி தொடக்கம்!
Nov 25, 2024, 01:21 PM IST
பெர்த்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் முதல் டெஸ்டின் நான்காவது நாளில், முகமது சிராஜின் விக்கெட்டுகள் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ஆக்ரோஷமான பேட்டிங் ஆகியவை முதல் அமர்வின் சிறப்பம்சங்கள் ஆகும்.
புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா இல்லாத நிலையில் பும்ரா அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியைத் தேடித் தந்துள்ளார். இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி., 238 ரன்களில் ஆட்டமிழந்தது. 58.4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்ஷித், நிதிஷ் தலா 1 விக்கெட்டை சுருட்டினர்.
பெர்த்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டின் நான்காவது நாளில், முகமது சிராஜின் விக்கெட்டுகள் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ஆக்ரோஷமான ஆட்டம் ஆகியவை முதல் அமர்வின் சிறப்பம்சங்கள். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 104/5 என்ற நிலையில் இருந்தது. பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. டிராவிஸ் ஹெட் மட்டும் அதிகபட்சமாக 89 ரன்கள் விளாசினார்.
உஸ்மான் கவாஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 17/4 என்று தடுமாறியது. ஆஸ்திரேலிய அணி 17.3 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.
அதன்பின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை நிலைப்படுத்தியது. அவர்கள் 62 ரன்கள் சேர்த்தனர், ஆனால் சிராஜ் மீண்டும் துல்லியமாக பந்து வீசினார், ஸ்மித்தை 17 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார், ஆஸ்திரேலியாவை 79/5 என்று கட்டுப்படுத்தினார்.
இந்தியாவுக்கு எதிராக அதிரடிக்குப் பெயர் பெற்ற டிராவிஸ் ஹெட் 72 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தொடர்ந்து போராடியபோது அவரது போராட்டமும் உறுதியும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், டிராவிஸ் ஹெட்டால் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
டாஸ் வென்ற இந்தியா
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முக்கியமான இன்னிங்ஸ், ஆறாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79/9 என்று சுருண்டது. இருப்பினும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு கொண்டு சென்றனர், இதனால் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 18 ஓவர்களில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணாவும் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தனது முன்னிலையை அதிகப்படுத்தியது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே 201 ரன்கள் தொடக்க கூட்டணி இருந்தது. தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து ஜெய்ஸ்வால் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின்னர் மிட்செல் மார்ஷிடம் 297 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையே 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் விராட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியின் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவை 487/6 என்று உயர்த்தியது. இந்திய அணி 533 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 12/3 என்று இருந்தது.
டாபிக்ஸ்