தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srilanka Cricket: இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா! முழு விவரம் இதோ

Srilanka Cricket: இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா! முழு விவரம் இதோ

Nov 29, 2023, 05:27 PM IST

google News
2024 ஜூலை மாதம் மூன்று ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2024 ஜூலை மாதம் மூன்று ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2024 ஜூலை மாதம் மூன்று ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் இலங்கை அணி மொத்தம் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 10 டெஸ்ட், 21 ஒரு நாள், 21 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளை சேர்த்தால் கூடுதல் டி20 ஆட்டங்களில் இலங்கை அணி விளையாட இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் 2024ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் ஜிம்பாப்வே அணி மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதைத்தொடர்ந்து வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அங்கு டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது.

இதன்பின்னர், இலங்கைக்கு சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஆண்டின் இறுதியில் தென் ஆப்பரிக்கா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது இலங்கை.

இதற்கிடையே ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி