தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India Innings: ஆறு டக் அவுட் - 98 ரன்கள் முன்னிலை! இந்தியா பேட்டர்களை வாரி சுருட்டிய தென் ஆப்பரிக்காவின் மூவர் கூட்டணி

India Innings: ஆறு டக் அவுட் - 98 ரன்கள் முன்னிலை! இந்தியா பேட்டர்களை வாரி சுருட்டிய தென் ஆப்பரிக்காவின் மூவர் கூட்டணி

Jan 03, 2024, 10:05 PM IST

google News
ராசியில்லாத கேப்டவுன் மைதானத்தில் தென் ஆப்பரிக்காவை மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரில் சுருட்டி சாதித்தனர் இந்திய பவுலர்கள். இதைப்போல் பேட்டர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய ஸ்கோர் எடுக்க தவறினர். (AFP)
ராசியில்லாத கேப்டவுன் மைதானத்தில் தென் ஆப்பரிக்காவை மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரில் சுருட்டி சாதித்தனர் இந்திய பவுலர்கள். இதைப்போல் பேட்டர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய ஸ்கோர் எடுக்க தவறினர்.

ராசியில்லாத கேப்டவுன் மைதானத்தில் தென் ஆப்பரிக்காவை மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரில் சுருட்டி சாதித்தனர் இந்திய பவுலர்கள். இதைப்போல் பேட்டர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய ஸ்கோர் எடுக்க தவறினர்.

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமநிலை செய்தது. இதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் செஷன் வேகப்பந்து வீச்சாளர்களு நன்கு சாதமாக ஆடுகளம் இருந்த நிலையில், பந்தும் நன்றாக ஸ்விங் ஆனது. இதை நன்கு பயன்படுத்தி கொண்ட இந்திய பவுலர்கள் தென் ஆப்பரிக்காவை 55 ரன்களில் ஆல்அவுட் செய்தனர்.

தென் ஆப்பரிக்கா ஒரு செஷன் முழுவதும் முடிவதற்குள் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பவுலர்களில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா பெரிய ஸ்கோர் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 153 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. தென் ஆப்பரிக்காவை விட 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

விராட் கோலி அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 39, சுப்மன் கில் 36 ரன்கள் எடுத்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இந்திய பேட்ஸ்மேன்களில் 6 பேட் டக் அவுட்டானார்கள். டெயிலண்டர்கள் நான்கு பேரும் முட்டையுடன் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இந்த மூவர் கூட்டணி இந்தியாவை பெரிய ஸ்கோர் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தியது.

தென் ஆப்பரிக்கா முதல் இன்னிங்கிஸில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா மிக பெரிய முன்னிலை பெற்று தென் ஆப்பரிக்காவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் நெருக்கடி தருவதற்கு நல்ல வாய்ப்பு அமைந்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்த இந்தியா தவறியுள்ளது.

இருப்பினும் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானமாக கருதப்படும் கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில், தென் ஆப்பரிக்காவை மிகவும் குறைவான ஸ்கோரில் ஆல்அவுட்டாக்கி இந்தியா சாதனை புரிந்துள்ளது.

கேப்டவுனில் இதுவரை இந்தியா விளையாடியிருக்கும் 6 போட்டிகளில் 4 தோல்வி, இரண்டு போட்டிகளை டிரா செய்துள்ளது. இந்த சூழலில் இந்த முறை முதல் வெற்றியை இங்கு பதிவு செய்வதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி