Ind vs Eng 5th Test Result: அசத்திய அஸ்வின்.. 5வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. WTC அட்டவணையில் இந்தியா நம்பர் 1
Mar 09, 2024, 04:28 PM IST
India Test Series Win: தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே நாளில் ஐந்து விக்கெட்டுகளை கபளீகரம் செய்து அசத்தினார். ஜோ ரூட் மட்டுமே அரை சதம் விளாசினார்.
தர்மசாலாவில் உள்ள எச்.பி.சி.ஏ ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
மூன்றாவது நாள் காலையின் தொடக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சோயிப் பஷீர் இந்தியாவின் கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. மற்றொரு தடுமாற்றமான தொடக்கத்தைப் பெற்றது என்றே கூறலாம், முதல் 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே நாளில் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். பின்னர் குல்தீப் யாதவ் களமிறங்கினார், அஸ்வின் தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஜஸ்பிரித் பும்ரா லோயர் ஆர்டரை வீழ்த்தி இங்கிலாந்தை வெறும் 195 ரன்களுக்கு சுருட்டினார். ஜடேஜா 1 விக்கெட்டை சாய்த்தார்.
இவ்வாறு இந்தியா தர்மசாலா டெஸ்டில் ஜெயித்தது.
முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, நடப்பு WTC சுழற்சியில் முதலிடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று தென்னாப்பிரிக்காவை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த இந்தியா, சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் இந்தியாவின் முதலிடத்தை பாதிக்குமா?
நியூசிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 60 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 59.09 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 66.67 மட்டுமே எடுக்க முடியும். ஆஸ்திரேலிய அணி ஒயிட்வாஷ் செய்தால் 62 மட்டுமே எடுக்க முடியும். இதனால், தற்போதைய நிலையில், இந்தியா மட்டுமே WTC Standing-இல் முதலிடத்தில் இருக்கிறது.
முன்னதாக, தர்மசாலாவில் நடந்த 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்ய வரவில்லை. அதற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்தது. வேகப்பந்துவீச்சாளரும் துணை கேப்டனுமான ஜஸ்ப்ரீத் பும்ரா, அணியை வழிநடத்தினார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேப்டன் ரோஹித் சர்மா முதுகுவலி காரணமாக 3-வது நாளில் களமிறங்கவில்லை. இந்தியாவின் நியமிக்கப்பட்ட துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா முதல் அமர்வில் அணியை வழிநடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2-வது நாள் ஆட்டத்தில் ரோஹித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இது இந்தத் தொடரில் அவரது இரண்டாவது சதமாகவும், ஒட்டுமொத்தமாக டெஸ்டில் 12வது சதமாகவும் அமைந்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்தார். ஷுப்மன் கில்லும் சதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் - கில் ஜோடி 171 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை ஆட்டமிழக்கச் செய்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்