தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Michael Bevan: இந்தியா தான் பலரது பேவரிட்! ஆனால் ஆஸ்திரேலியாவிடம் இருக்கும் பலம்..!பினிஷர் மைக்கேல் பேவன் சொல்வது என்ன?

Michael Bevan: இந்தியா தான் பலரது பேவரிட்! ஆனால் ஆஸ்திரேலியாவிடம் இருக்கும் பலம்..!பினிஷர் மைக்கேல் பேவன் சொல்வது என்ன?

Nov 17, 2023, 04:32 PM IST

google News
ஆஸ்திரேலியா அணியில் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பதாக, அந்த அணியை சேர்ந்த முன்னாள் பினிஷரான மைக்கேல் பேவன்கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பதாக, அந்த அணியை சேர்ந்த முன்னாள் பினிஷரான மைக்கேல் பேவன்கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியில் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பதாக, அந்த அணியை சேர்ந்த முன்னாள் பினிஷரான மைக்கேல் பேவன்கூறியுள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்தியா நான்காவது முறையும், ஆஸ்திரேலியா எட்டாவது முறையும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. ஆஸ்திரேலியா அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கடந்த 2011இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வென்று இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. அந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இந்த முறையும் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் நிலையில், நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த முறையும் இந்தியா தான் உலகக் கோப்பை வெல்லும் எனவும் பலரது விருப்பமாக இருந்து வருகிறது.

இந்தியா சாம்பியன் ஆவது அனைவரின் விருப்பமாக இருந்தாலும், ஆஸ்திரேலியா சாம்பியன் ஆவதற்காக வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக்கேல் பேவன் கூறியுள்ளார். இதுகுறித்து மைக்கேல் பவன் கூறியதாவது:

"உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதென்பதே மிகப் பெரிய சாதனையாக அமைகிறது. ஏனென்றால் இது அடிக்கடி நிகழும் விஷயம் அல்ல. பைனலில் விளையாட இருக்கும் இரு அணிகளும் உச்சகட்ட பார்மில் இருந்து வருகின்றன.

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை போட்டியை எந்த தருணத்திலும் மாற்றியமைக்ககூடிய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் அவர்கள் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டாலே போதுமானது. 

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இரு அணிகளிலும் பேட்டிங் வலுவாக இருப்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும்.

ஆஸ்திரேலியா மொதுவாக தொடங்கினாலும் கம்பேக் கொடுத்து இறுதிப்போட்டி வரை வந்துள்ளனர்" என்றார்.

உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத அணியாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், அடுத்து கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றுள்ளது.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி