தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa Third Odi: ஒரு நாள் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி! கோலியை போல் சாதிப்பாரா கேஎல் ராகுல்?

IND vs SA Third ODI: ஒரு நாள் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி! கோலியை போல் சாதிப்பாரா கேஎல் ராகுல்?

Dec 21, 2023, 05:00 AM IST

google News
டி20 தொடருக்கு பின் நடைபெறும் ஒரு நாள் தொடரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இளம் படையுடன் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன.
டி20 தொடருக்கு பின் நடைபெறும் ஒரு நாள் தொடரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இளம் படையுடன் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன.

டி20 தொடருக்கு பின் நடைபெறும் ஒரு நாள் தொடரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இளம் படையுடன் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன.

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்று சமநிலை அடைந்தது.

இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஜோகன்னஸ்பெர்கில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் க்கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பரிக்கா வெற்றது. தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரிலுள்ள போலாந்து பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் நல்ல பார்மில் உள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அவர் அரைசதமடித்ததுடன், முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்து இந்திய அணியின் டாப் ஸ்கோரராக உள்ளார். இவரை தவிர கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார்.

பவுலிங்கை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், குல்தீப் யாதவ் ஸ்பின் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். பெரிதாக எதிர்பார்க்கப்படும் சஞ்சு சாம்சன் பெரிய தனது பார்மை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேபோல் முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் நிலைத்து பேட் செய்ய வேண்டும் என்ற நிலையில் உள்ளார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் நிலவரம்

போட்டி நடைபெறும் போலாந்து பார்க் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு நன்கு கை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பந்து மெதுவாகவும், பவுன்சர் குறைவாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும், வானிலை 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை இவ்விரு அணிகளும் 15 ஒரு நாள் தொடர்களில் மோதியிருக்கும் நிலையில் தென் ஆப்பரிக்கா 7, இந்தியா 6 தொடர்களில் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் தென் ஆப்பரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை கோலிக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் பெறுவார்.

2018 சுற்றுப்பயணத்தின் போது 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது தென் ஆப்பரிக்கா மண்ணில் இந்தியா பெற்ற சிறந்த வெற்றியாக இன்று வரையிலும் உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி