IND vs SA T20 Series: கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி! மாற்று வீரர் யார் தெரியுமா?
Dec 09, 2023, 03:37 PM IST
முழு உடல்தகுதி இல்லாத நிலையில், தென் ஆப்பரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகை தொடர்களிலும் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டர்பன் நகரில் நாளை மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கிடையே இடது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக பியூரன் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அணியில் இருக்கும் ஒட்னியல் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோருடன் ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளரா 33 வயதாகும் ஹென்ட்ரிக்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். தென் ஆப்பரிக்காவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடாவுக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியிலும் பவுலிங் ஆல்ரவுண்டரான தீபக் சஹார் சொந்த காரணங்களுக்காக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கான மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை.
காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இந்த தொடரில் இடம்பெறாத நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார்.
கடைசியாக கடந்த 2021- 22இல் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஒரு நாள், டெஸ்ட் தொடர்களில் மட்டும் விளையாடியது. இதில் ஒரு நாள் தொடரை 3-0 எனவும், டெஸ்ட் தொடரை 2-1 எனவும் இழந்தது.
இந்த முறை டி20 தொடரிலும் பங்கேற்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்