IND vs SA Second Test Preview: கடைசி டெஸ்டில் கேப்டனாக களமிறங்கும் எல்கார்! கேப்டவுனில் வரலாறு படைக்குமா இந்தியா?
Jan 03, 2024, 06:45 AM IST
கேப்டவுனில் இதுவரை ஒரு முறை கூட இந்தியா டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. அந்த வரலாற்ற மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையே இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியுலாண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா, தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது. அத்துடன் தென் ஆப்பரிக்கா வீரரும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான டீன் எல்கார் கடைசி டெஸ்ட் போட்டியாக இருப்பதால் வெற்றியுடன் அவருக்கு விடை கொடுக்க தென் ஆப்பரிக்கா அணி முயற்சிக்கும்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான இதில் வென்றால், இந்தியா டெஸ்ட் தொடரை சமநிலை செய்யலாம். காயம் காரணமாக தென் ஆப்பரிக்கா கேப்டன் டெம்பா பவுமா இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னிலை பெற வேண்டுமானால் நியூலாண்ஸில் நடைபெறும் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது. அதைவிட மோசமாக இந்தியாவின் பவுலிங் அமைந்திருந்தது. அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் இணைந்து 194 ரன்களை வாரி வழங்கினர். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு பதிலாக முகேஷ் குமார் அல்லது ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட வேண்டும்.
முதல் போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட ஜடேஜா தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதால் அவரை சர்ப்ரைஸாக களமிறக்கவும் வாய்ப்பு உள்ளது.
கடைசி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதமடித்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார் எல்கார். பவுமா இல்லாத நிலையில் அவர்தான் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி என்ற கூடுதல் பொறுப்புடன் களமிறங்கினாலும், அவரது பேட்டிங் பார்ம் இந்திய பவுலர்களுக்கு சவால் அளிப்பதாகவே இருக்கும்.
பவுமாவுக்கு பதிலாக சுபைர் ஹம்சா இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் நிலவரம்
புற்கள் நிறைந்து பச்சையாக காணப்பட்டாலும் போட்டி தொடங்கிய சில மணி நேரத்துக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பின்னர் ஸ்பின்னர்களுக்கும் ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வானிலை பொறுத்தவரை வறண்டு காணப்படும் எனவும், காற்று பலமாக வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுனில் இதுவரை விளையாடியிருக்கும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் கடைசியாக 2013-14 சுற்றுப்பயணத்தில் இந்தியா ஒரு டெஸ்ட் கூட வெல்லாமல் போனது. எனவே இவை மீண்டும் நிகழாத வண்ணம் இந்தியா போராடும் என எதிர்பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்