India Vs SouthAfrica Live Score: ஜடேஜா 5 விக்கெட்டுகள்! 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Nov 05, 2023, 09:00 PM IST
Ind vs SA Live Score Updates World Cup 2023: பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன. இப்போட்டி தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்ஸ் இங்கு காணலாம்.
தொடர்ச்சியாக 8 போட்டிகளிலும் வெற்றி
உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து 101 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பரிக்கா 83 ரன்களில் ஆல்அவுட்
பேட்டிங்கை போல் பவுலிங்கிலும் கலக்கிய இந்தியா, தென் ஆப்பரிக்கா அணியை 83 ரன்களில் ஆல்அட்டாக்கியுள்ளது. இதனால் 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது
ஜடேஜாவுக்கு 5 விக்கெட்டுகள்
அற்புதமான பவுலிங்கால் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களை திணறடித்த ஜடேஜா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
குல்தீப்புக்கு முதல் விக்கெட்
இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 11 ரன்கள் எடுத்திருந்த ஜான்சன், குல்தீப் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்
20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பரிக்கா
20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பரிக்கா அணி 69 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
ஜடேஜாவுக்கு மூன்றாவது விக்கெட்
ஜடேஜா மூன்றாவது விக்கெட்டாக டேவிட் மில்லரை தூக்கியுள்ளார். 11 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மில்லர், ஜடேஜா பந்தில் போல்டாகியுள்ளார்
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள்
தென் ஆப்பரிக்கா அதிரடி பேட்ஸ்மேன் கால்சன் 1 ரன் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். இவர் அவுட்டான அடுத்த ஓவரில் வான் டெர் டஸ்ஸன் 11 ரன்களுடன் ஷமி பந்தில் அவுட்டானார்
மூன்றாவது முறையாக முதல் ஓவரில் ஷமிக்கு விக்கெட்
உலகக் கோப்பை 2023 தொடரில் முகமது ஷமி தனது முதல் ஓவரில் மூன்றாவது முறையாக விக்கெட் வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன் மார்க்ரம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் அவுட்டானார்
பவுமா விக்கெட்டை தூக்கிய ஜடேஜா
ஜடேஜா வீசிய தனது முதல் ஓவரில் தென் ஆப்பரிக்கா கேப்டன் பவுமா விக்கெட்டை தூக்கினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் போல்டாகி வெளியேறினார்
தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 17 விக்கெட்டுகள்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 12 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பார்மில் இருக்கும் குவன்டைன் டி காக் அவுட்
தனது முதல் ஓவரிலேயே பார்மில் இருக்கும் குவன்டைன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ். 5 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் அவர் கிளீன் போல்டு ஆனார்
கோலிக்கு சச்சின் வாழ்த்து
விராட் கோலி 49வது சதம் அடித்திருக்கும் நிலையில் எக்ஸ் தளத்தில் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிறந்தநாளில் சதமடித்த வீரர்கள்
ராஸ் டெய்லர் - 131 ரன்கல் நாட் அவுட்
மிட்செல் மார்ஷ் - 121 ரனகள்
விராட் கோலி - 101 ரன்கள் நாட் அவுட்
பிறந்தநாளில் சதமடித்த வீரர்கள் லிஸ்டில் இணைந்த கோலி
பிறந்தநாளில் சதமடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி. நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு அடுத்தபடியாக பிறந்தநாளில் சதமடித்த வீரராக மாறியுள்ளார் கோலி
இந்தியா 326 ரன்கள் குவிப்பு
50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 326 ரன்கள் எடுத்துள்ளது. கோலி சதமடித்து 101 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்
விராட் கோலி 49வது சதம்
தனது பிறந்தநாளில் விராட் கோலி தனது 49வது சதத்தை அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார் கோலி
சூர்யகுமார் யாதவ் அவுட்
அதிரடியாக பேட் செய்து 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் அவுட்டாகியுள்ளார்
45 ஓவர் முடிவில் 282 ரன்கள்
இந்தியா 45 ஓவர் முடிவில் 4 விிக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 89, சூர்யகுமார் யாதவ் 17 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்
கேஎல் ராகுல் அவுட்
நிதானமாக பேட் செய்து வந்த கேஎல் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில், சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டாகியுள்ளார்
40 ஓவரில் இந்தியா 239 ரன்கள்
இந்திய 40 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 75, கேஎல் ராகுல் 5 ரன்களுடன் பேட் செய்து வருகின்றனர்
ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்
ஆரம்பத்தில் நிிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிடி பந்தில் அவுட்டானார்
இந்திய 200 ரன்கள்
ஆட்டத்தின் 33. 1 ஓவரில் இந்தியா 200 ரன்களை கடந்துள்ளது
32 ஓவரில் 196 ரன்கள்
32 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 55, ஷ்ரேயாஸ் ஐயர் 60 ரன்களுடன் கலத்தில் உள்ளனர்
ஷ்ரேயாஸ் அரைசதம்
கோலியுடன் இணைந்து பொறுமையாக பேட் செய்து ரன் குவித்து வந்த ஷரேயாஸ் ஐயர் அரைசதத்தை அடித்தார். இவர் 64 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்
கோலி அரைசதம்
பிறந்தநாளில் களமிறங்கியிருக்கும் விராட் கோலி சிறப்பான இன்னிங்ஸை விளையாடி அரைசதமடித்துள்ளார். இந்திய அணியின் ஸ்கோர் 28.2 ஓவரில் 165 என உள்ளது
கோலி - ஷ்ரேயாஸ் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்
விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து 89 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்
20 ஓவர் முடிவில் இந்தியா 124 ரன்கள்
20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கோலி 37, கில் 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்
கோலி - ஷ்ரேயாஸ் நிதானம்
13.1 ஓவரில் இந்தியா 100 ரன்களை கடந்த நிலையில், களத்தில் பேட் செய்து வரும் கோலி - ஷ்ரேயாஸ் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
கில் அவுட்
பவர்ப்ளே முடிந்தவுடன் அடுத்து கேசவ் மகராஜ் வீசிய ஓவரின் இரண்டாவது பந்தில் சிறப்பாக பேட் செய்து வந்த சுப்மன் கில் போல்டாகி வெளியேறினார்.
கில் 24 பந்துகளில் 23 ரன்கள் எடுத்துள்ளார்
பவர் ப்ளே முடிவில் இந்தியா 91 ரன்கள்
பிரதான பவர்ப்ளே முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 40 ரன்கள் எடுத்து அவுட்டாகியுள்ளார்.
கில் 23, கோலி 18 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்
பவுண்டரியுடன் ரன் வேட்டையை தொடங்கிய கோலி
பிறந்தநாளில் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் களமிறங்கியிருக்கும் கோலி, தனது கிளாசிக் ஸ்டைல் கவர் ட்ரைவில் பவுண்டரி அடித்து ரன் வேட்டையை தொங்கியுள்ளார்
ரபாடா பந்தில் காலியான ரோஹித்
24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, ரபாடா பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தென்ஆப்பரிக்கா கேப்டன் பவுமா அற்புதமான கேட்ச் பிடித்து ரோஹித்தை வெளியேற்றினார்
சிக்ஸருடன் 50+ ஸ்கோரை எட்டிய இந்தியா
ஆட்டத்தின் 4.2 ஓவரில் இங்கிடி வீசிய பந்தை பைன் லெக் திசைக்கு சிக்ஸர் பறக்கவிட்டார் ரோஹித் ஷர்மா. இந்தியா அணி ஸ்கோர் 50 ரன்களை கடந்தது. ரோஹித் - கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பாட்ர்டனர்ஷிப் அமைத்துள்ளனர்
தப்பித்த ரோஹித் ஷர்மா
ஆட்டத்தின் 3.4 ஓவரில் ரோஹித் ஷர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை Third man திசையில் இருந்த ஷம்சி தவறவிட்டார். சற்று கடினமாக வாய்ப்பாகவே இது அமைந்தது
யான்சன் முதல் ஓவரில் 17 ரன்கள்
தென் ஆப்பரிக்கா இடது கை வேகப்பந்து வீச்சாளர் யான்சன் வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. கில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்
இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதல்?
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இந்த இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் மீண்டும் வான்கடே மைாதனத்தில் மோதும் வாய்ப்பு உள்ளது
இந்திய அணியில் மாற்றமில்லை
தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் வெற்றி காம்பினேஷனுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்குகிறது
தென் ஆப்பரிக்கா அணியில் தப்ரைஸ் ஷம்சி
இன்றைய போட்டியில் தென் ஆப்பரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார்
இந்தியா பேட்டிங்
தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்
India : இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது
உ லகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 12 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது.
India vs South Africa : கடும் சோதனைக்கு உட்படுத்தக்கூடும்
ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றும் திறன்கொண்ட வீரர்கள் நிறைந்த தென் ஆப்பிரிக்கஅணியின் பேட்டிங் வரிசை இந்தியாவின் பந்து வீச்சை கடும் சோதனைக்கு உட்படுத்தக்கூடும்.
India vs South Africa : வலுவானமோதல் கொண்ட போட்டியாக இருக்கும்!
இன்றைய லீக் ஆட்டம் இரு அணிகளுக்குமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னதாக வலுவானமோதல் கொண்ட போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
South Africa : பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க!
தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
India vs South Africa : விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டார்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்களிலும், நியூஸிலாந்துக்கு எதிராக 95 ரன்களிலும், இலங்கைக்கு எதிராக 88 ரன்களிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டார். விராட் கோலிக்கு இன்று 35-வது பிறந்த நாள். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்தால் அது ரசிகர்களுக்கு வழங்கும் சிறந்த பரிசாக இருக்கக்கூடும்.
India vs South Africa : தென்னாப்பிரிக்கா 2வது இடம்!
தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் 6 வெற்றி ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
India vs South Africa : இந்திய அணி வென்றால் என்னவாகும்?
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி தோல்வி பெற்றால் ஆட்டம் மாறக்கூடும்.
India vs South Africa : இந்திய அணி ஆதிக்கம்
7 ஆட்டங்களில் விளையாடி தோல்விகளை சந்திக்காமல் 14 புள்ளிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியஅணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
India vs South Africa : ரோஹித் ஷர்மாவுக்கு கை கொடுக்கும் ஈடன் கார்டன்
ரோஹித் சர்மாவுக்கு ஈடன் கார்டன் மைதானம் சிறப்பாகவே இருந்துள்ளது. இங்கு அவர், கடந்த 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார். இதனால் இம்முறையும் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
India vs South Africa : தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதியில் நுழைவது உறுதி!
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியும் அரை இறுதியில் நுழைவது உறுதியாகி உள்ளது. அதனால் இன்று நடக்கும் இந்த ஆட்டம் மிகவும் பெரிதாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
India vs South Africa : சிறப்பான ஒரு டீம்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. சிறப்பான ஒரு டீமாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
India : தென்ஆப்பரிக்கா 3, இந்தியா 2 முறை வென்று!
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்ஆப்பரிக்கா 3, இந்தியா 2 முறை வென்றுள்ளது. இந்த வெற்றி வித்தியாசத்தை சமன்படுத்த இந்திய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
வானிலை பொறுத்தவரை!
வானிலை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும் எனவும் பகல் நேரத்தில் 30 டிகிரிக்கு மேலும், இரவில் 20 வரை குறையவும் வாய்ப்புள்ளது. பனிப்பொலிவு இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
த்ரில்லராக இருக்கும்!
ஈடன் கார்டன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க உதவினால், பேட்ஸ்மேன்களை ரன்அடிக்க விடாமல் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பின்னர்கள் பந்து வீச்சு எடுபடும். இங்கு நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் முதல் பேட்டிங், சேஸிங் அணிகள் என இரண்டும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்களும் குறைவான ஸ்கோர் போட்டியாகவே உள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியும் குறைவான ஸ்கோர் த்ரில்லராக இருக்கும் என நம்பலாம்.
India : சேஸிங்கில் அதிக வெற்றிகளை குவித்திருக்கும் இந்தியா!
சேஸிங்கில் அதிக வெற்றிகளை குவித்திருக்கும் இந்தியா, தனது பவர்புல் பவுலிங் அட்டாக் மூலம் முதல் பவுலிங் செய்து தென் ஆப்பரிக்காவை கட்டுப்படுத்தவும் செய்யலாம்.
India vs SouthAfrica : இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்!
இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. தென் ஆப்பரிக்கா அணி சேஸ்ங்கில் நெருக்கடியை சந்தித்து வருவதால் இந்தியா இதை சாதமாக்கி கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.
South Africa : கடைசி விக்கெட் வரை சென்று த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பரிக்கா!
தென் ஆப்பரிக்கா முதல் பேட்டிங்கில் 5, சேஸிங்கில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. சேஸிங்கில் வென்ற போட்டியிலும் கடைசி விக்கெட் வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.
South Africa : இந்தியாவுக்கு சரியான சவால் மிக்க அணி தென் ஆப்பரிக்கா!
இந்தியாவுக்கு சரியான சவால் மிக்க அணியாகவே தென் ஆப்பரிக்கா உள்ளது. இந்தியா சேஸிங்கில் 5, முதல் பேட்டிங்கில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
South Africa : சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் குவன்டைன் டி காக்!
உலகக் கோப்பை 2023 தொடரின் டாப் ரன் ஸ்கோரர் குவன்டைன் டி காக் தென் ஆப்பரிக்கா ஓபனிங் பேட்ஸ்மேனாக இருப்பதுடன், இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்துள்ளார்.
SouthAfrica : இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்கவும் வாய்ப்பு!
தென் ஆப்பரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்கவும் வாய்ப்பு உள்ளது.
SouthAfrica : தென் ஆப்பரிக்கா சேஸிங்கில் தடுமாறி வருகிறது!
தென் ஆப்பரிக்காவை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் அணி முதல் பேட்டிங்கில் மிரட்டலாகவும், சேஸிங்கில் தடுமாறியும் வருகிறது. அதேபோல் பவுலர்களையும் ஆடுகளம் மற்றும் சுழலை பொறுத்து மாற்றி அமைத்து வருகிறது.
Ind vs SA : அஸ்வினை அணிக்கு மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பு!
அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் முக்கிய பவுலர்களான பும்ரா அல்லது சிராஜ் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளித்து விட்டு சோதனை முயற்சியாக அஸ்வினை அணிக்கு மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. இதை செய்யாத பட்சத்தில் வெற்றி கூட்டணியனுடனே மீண்டும் களமிறங்கி வெற்றி பயணத்தை தொடரலாம்.
பவுலிங் இந்தியாவுக்கு நன்கு கைகொடுக்கும்!
பவுலிங் தற்போது இருக்கும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் காம்போ இந்தியாவுக்கு நன்கு கைகொடுக்கும் விதமாக உள்ளது.
Ind vs SA : ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் சிறப்பான ஆட்டம்
பேட்டிங்கில் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரின் பார்ம் பற்றி கேள்வி எழுந்த நிலையில், கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டம் மூலம் இருவரும் அதை சரி செய்தார்கள்.
Ind vs SA : தொடரிலிருந்து விலகிவிட்ட ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடரிலிருந்து விலகிவிட்ட நிலையில், பவுலிங்கில் அவரது இடத்தை சிறப்பாக நிரப்பியுள்ளார் முகமது ஷமி. அதேவேளையில் பேட்டிங்கில் அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பாணி ஆட்டத்தால் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
Ind vs SA : ஒத்திகையாகவே இந்தப் போட்டி
இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் மோத இருக்கும் நிலையில், நாக்அவுட் போட்டிக்கு முன்னர் ஒத்திகையாகவே இந்தப் போட்டி அமைந்துள்ளது.
India : அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி!
இந்தியா இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாகவும், அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணியாகவும் உள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு மற்ற அணிகளுக்குள்ளே மிகப் பெரிய போட்டியே நிலவி வருகிறது. தென் ஆப்பரிக்கா அணியும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது.
Ind vs SA : இந்தியா - தென் ஆப்பரிக்கா அணி இன்று மோதல்!
உலகக் கோப்பை 2023 தொடரின் 37வது போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய போட்டி எங்கே?
Ind vs SA Live Score Updates World Cup 2023: இன்றைய இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி, கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
நாங்க அதுக்கும் மேல
Ind vs SA Live Score Updates World Cup 2023: இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியடையாமல், முக்கிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி, பலமிக்க அணியாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது
வலுமான இடத்தில் தென்னாப்பிரிக்கா
Ind vs SA Live Score Updates World Cup 2023: ஒரு போட்டி மட்டுமே தோற்றிருந்தாலும் பேட்டிங் வரிசையில் வலுவாக உள்ளது தென்னாப்பிரிக்க அணி.
உண்மையான பலப்பரிட்சை
Ind vs SA Live Score Updates World Cup 2023: தென்னாப்பிரிக்கா-இந்தியா மோதும் இன்றைய போட்டி தான், உண்மையில் இந்த தொடரின் முக்கியமான பலப்பரிட்சை போட்டியாக பார்க்கப்படுகிறது.