IND vs SA 3rd T20: ஸ்பின் ஜாலம் நிகழ்த்திய குல்தீப்! 106 ரன்களில் தென் ஆப்பரிக்காவை வீழ்த்திய இந்தியா
Dec 15, 2023, 12:25 AM IST
குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்தியா - தென் ஆப்பரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. நல்ல பார்மில் இருக்கும் இந்திய அணி கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட் செய்து சதமடித்து அவுட்டானார்.
இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதமடித்து, 60 ரன்களில் அவுட்டானார்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய கேசவ் மகராஜ் 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லிசாட் வில்லியம்ஸும் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 202 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய தென் ஆப்பரிக்கா, 13.5 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்துள்ளனர்.
அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35, ஐடன் மார்க்ரம் 25 ரன்கள் எடுத்தனர். இவருக்கு அடுத்தபடியாக டோனோவன் ஃபெரேரா 12 ரன்கள் எடுத்தார்.
இந்திய பவுலர்கள் அனைவரும் சிறப்பாகவே பந்து வீசிய நிலையில், குல்தீப் யாதவ் பந்தை எதிர்கொள்ள திணறிய தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவரது பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 17 ரன்களை விட்டுக்கொடுத்து குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இன்றைய போட்டியில் ஆட்ட நாயகனாக சதமடித்து வானவேடிக்கை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், மீதமிருந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 1-1 என சமநிலை அடைந்துள்ளது
டி20 தொடர் முடிவுற்றிருக்கும் நிலையில், அடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இதையடுத்து முதல் போட்டியானது வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய நேரப்படும் பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9