தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sa 1st Odi: வேகத்தில் கலக்கிய அர்ஷ்தீப், ஆவேஷ் கூட்டணி! தென் ஆப்பரிக்கா 116 ரன்களில் ஆல் அவுட்

IND vs SA 1st ODI: வேகத்தில் கலக்கிய அர்ஷ்தீப், ஆவேஷ் கூட்டணி! தென் ஆப்பரிக்கா 116 ரன்களில் ஆல் அவுட்

Dec 17, 2023, 04:28 PM IST

google News
வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் அற்புத பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் சுருண்டனர். (AFP)
வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் அற்புத பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் சுருண்டனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் அற்புத பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் சுருண்டனர்.

இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

இதையடுத்து இந்தியா பவுலர்களின் அற்புத பந்து வீச்சால் 27.3 ஓவரில் 116 ரன்களில் தென் ஆப்பரிக்கா ஆல் அவுட்டாகியுள்ளது. தென் ஆப்பரிக்காவில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன் டோனி டி ஜோர்ஜி 28 ரன்கள் எடுத்தார்.

இந்தியா பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பரிக்காவில் 5 விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

காலை நேரத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆன சூழலை நன்கு சாதகமாக்கி கொண்டு தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்ததுடன், அவர்களை அவுட்டாக்கி அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இன்றைய போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறது. இந்தியா இந்த போட்டியை வெற்றி பெற வேண்டுமானால் 117 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி