Ind vs Eng 4th Test: ஆகாஷ் தீப் அற்புதம்! விக்கெட் சரிவை தடுத்து சரியான ரூட்டில் சென்ற ரூட் - இங்கிலாந்து நிதான ஆட்டம்
Feb 23, 2024, 05:36 PM IST
Ind vs Eng 4th Test Day 1:நிதானமாகவும், பொறுமையாகவும் ரன்கள் சேர்த்து வந்த ஜோ ரூட் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு விக்கெட் சரிவையும் தடுத்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது ஆட்டம் இன்று ராஞ்சியில் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட் சதமடித்ததுடன் 106 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இவருடன் ராபின்சன் 31 ரன்கள் எடுத்து பேட் செய்து வருகிறார்.
ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போக்ஸ் 47 ரன்கள் எடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி 42, ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களின் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளஐ எடுத்தனர். ஸ்பின்னர்களிள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
அறிமுக வீரரான ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசிய நிலையில், முதல் 3 விக்கெட்டுகளை முதல் செஷனிலேயே தூக்கினார். 12 ஓவர்களுக்குள் 57 ரன்களில் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு முன்னர் டாப் 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 112 ரன்கள் என இருந்தது.
இதைத்தொடர்ந்து இன்றைய நாளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது செஷனில் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடினர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட் - விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் சரிவை தடுத்ததுடன் 6வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர்.
நிதானமாகவும், பொறுமையாகவும் ரன்கள் சேர்த்து வந்த ரூட் அரைசதத்தை பூர்த்தி செய்து சதமடித்தார். இந்திய பவுலர்களில் குல்தீப் யாதவ் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்