தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng 3rd Test: பேட்டிங்கில் கலக்கிய அறிமுக வீரர்கள் சர்ஃபரஸ் கான், துருவ் ஜுரல் - இந்தியா ஆல்அவுட்

Ind vs Eng 3rd Test: பேட்டிங்கில் கலக்கிய அறிமுக வீரர்கள் சர்ஃபரஸ் கான், துருவ் ஜுரல் - இந்தியா ஆல்அவுட்

Feb 16, 2024, 01:58 PM IST

google News
Ind vs Eng 3rd Test: முதல் நாளில் அறிமுக வீரரான சர்ஃபரஸ் கான் சூப்பராக பேட் செய்து அரைசதமடித்தார். தற்போது இரண்டாவது நாளில் மற்றொரு அறிமுக வீரர் துருவ் ஜுரல் அரைசதத்தை மிஸ் செய்த போதிலும் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பை தந்தார். (AFP)
Ind vs Eng 3rd Test: முதல் நாளில் அறிமுக வீரரான சர்ஃபரஸ் கான் சூப்பராக பேட் செய்து அரைசதமடித்தார். தற்போது இரண்டாவது நாளில் மற்றொரு அறிமுக வீரர் துருவ் ஜுரல் அரைசதத்தை மிஸ் செய்த போதிலும் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பை தந்தார்.

Ind vs Eng 3rd Test: முதல் நாளில் அறிமுக வீரரான சர்ஃபரஸ் கான் சூப்பராக பேட் செய்து அரைசதமடித்தார். தற்போது இரண்டாவது நாளில் மற்றொரு அறிமுக வீரர் துருவ் ஜுரல் அரைசதத்தை மிஸ் செய்த போதிலும் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பை தந்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா 110, குல்தீப் யாதவ் 1 ரன் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது. இன்றைய நாளில் 44.5 ஓவர் பேட் செய்த இந்தியா கூடுதலாக 120 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 130.5 ஓவரில் 445 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது.

இங்கிலாந்து பவுலர்களில் மார்க் உட் 4, ரெஹான் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆண்டர்சன், ஜோ ரூட், டாம் ஹார்ட்லீ ஆகியோர் தலா ஒரு விிக்கெட்டை எடுத்தனர்.

110 ரன்கள் எடுத்திருவந்த ஜடேஜா இன்றைய நாளில் கூடுதலாக 2 நாள் மட்டும் எடுத்திருந்த நிலையில் ரூட் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இவரை தொடர்ந்து அறிமுக வீரரான துருவ் ஜுரல் சிறப்பாக பேட் செய்து 46 ரன்கள் அடித்து அவுட்டானார். ஜுரல் - அஸ்வின் ஆகியோர் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அஸ்வின் 37 ரன்கள் அடித்தார்.

டெயில் பேட்ஸ்மேனாக களமிறங்கி கொஞ்சம் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்ட பும்ரா 28 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி