தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng 1st Test: ஹார்ட்லி விக்கெட் மழை!கடைசி ஓவரில் த்ரில் வெற்றி - ஸ்பின்னை வைத்தே இந்தியாவை காலி செய்த இங்கிலாந்து

Ind vs Eng 1st Test: ஹார்ட்லி விக்கெட் மழை!கடைசி ஓவரில் த்ரில் வெற்றி - ஸ்பின்னை வைத்தே இந்தியாவை காலி செய்த இங்கிலாந்து

Jan 28, 2024, 06:20 PM IST

google News
Ind vs Eng 1st Test Result: முதல் இன்னிங்ஸில் ரன்களை வாரி வழங்கிய ஹார்ட்லி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் மழை பொழிந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. (AFP)
Ind vs Eng 1st Test Result: முதல் இன்னிங்ஸில் ரன்களை வாரி வழங்கிய ஹார்ட்லி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் மழை பொழிந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

Ind vs Eng 1st Test Result: முதல் இன்னிங்ஸில் ரன்களை வாரி வழங்கிய ஹார்ட்லி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் மழை பொழிந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இங்கிலாந்து உணவு இடைவெளிக்கு முன், 420 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல்அவுட்டானது. மூன்றாம் நாள் முடிவில் 316 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று கூடுதலாக 104 ரன்கள் எடுத்த. இங்கிலாந்து 229 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா 230 ரன்கள் சேஸ் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து இன்று நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் மட்டும் எடுத்து ரன்களை வாரி வழங்கிய இங்கிலாந்து இடது கை ஸ்பின்னர் ஹாட்ர்லி இரண்டாவது இன்னிங்கிஸ் தனது அற்புத சுழலால் இந்திய பேட்ஸ்மேன்களை திணற வைத்ததுடன், 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்களில் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.

இவருக்கு அடுத்தபடியாக அஸ்வின் 28. ஸ்ரீகர் பரத் 28 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் எப்படியாவது இந்த போட்டியில் ஜெயித்துவிட வேண்டும் என நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து 57 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதிலும், இவர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாக இந்தியா தோல்வியை தழுவியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி