IND vs AFG 3rd T20I: ஒற்றை ஆளாக போராடிய குலாப்தின் நயிப்! சூப்பர் ஓவரில் முடிந்த போட்டி
Jan 17, 2024, 10:42 PM IST
IND vs AFG 3rd T20I Result: இந்திய பவுலர்களை, அடித்து துவைத்து ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் விளையாடிய விதத்தை பார்க்கையில் சேஸ் செய்து வரலாற்று சாதனை செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஒற்றை ஆளாக போராடிய குலாப்தின் நயிப் ஆட்டத்தை சூப்பர் ஓவரில் முடித்தார்.
வஇந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி பெங்களுருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. முதல் இரண்டு போட்டியில் டக்அவுட்டான ரோஹித் ஷர்மா, இரண்டு போட்டிகளுக்கும் சேர்த்து இன்று அதிரடியாக பேட் செய்ததுடன் சதமடித்தார். 121 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் இணைந்து அதிரடி கோதாவில் இறங்கிய ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து 213 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டது. இந்திய பவுலர்கள் பந்து வீச்சை விரட்டி அடித்த போதிலும் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகே வந்து போட்டியை டை செய்தது.
கடைசி வரை ஒற்றை ஆளாக போராடி பேட் செய்த குலாப்தின் நயிப், அதிரடியாக பேட் செய்து 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 50, கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 50 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.
இதற்கு அடுத்தபடியாக அதிரடியாக பேட் செய்த குலாப்தின் நயிப், முகமது நபி 34 ரன்களும் எடுத்தனர். கடைசி வரை வெற்றிக்காக போராடிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய பவுலர்களில் ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்