IND vs AFG 1st T20 Preview: காயத்தால் விலகிய ரஷித் கான் - மீண்டும் டி20 அணியில் ரோஹித் ஷர்மா! சாதிக்குமா இந்தியா?
Jan 11, 2024, 06:45 AM IST
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடராக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர் அமைந்துள்ளது. இதன் பின்னர் ஐபிஎல் தொடரில் டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொடராக உள்ளது.
இந்த ஆண்டில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதத்தில் இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்தியா விளையாட இருக்கும் கடைசி டி20 தொடராக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர் அமைந்துள்ளது. இதன் பின்னர் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று, நேரடியாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள்.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு பின்னரே 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான டி20 தொடராக இந்த போட்டி அமைகிறது.
2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் முழுமையாக 2023 முழுவதிலும் இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் பங்கேற்காத ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர். இன்றைய போட்டியில் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.
அதிரடியான ஓபனிங் தரக்கூடிய ரோஹித் ஷர்மா, இடது கை இளம் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் ஓபனர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஓபனராக சுப்மன் கில் அணியில் இருந்தாலும் அவர் வேறொரு இடத்தில் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.
மற்ற பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தங்களது பணியில் எந்த குழப்பமும் இல்லாமல் இருப்பதால் இந்திய அணி நன்கு செட்டிலான அணியாகவே இருந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை டாப் அணியாக திகழும் இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் தங்களது அணியின் பலத்தை மெருகேற்றி கொள்வதற்கான வாய்ப்பாகவும், பெரிய தொடரான டி20 உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த மேற்கொள்ளும் பயிற்சியாகவும் உள்ளது.
இந்த தொடருக்கு பின்னரும் ஏராளமான டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் விளையாட இருப்பதால், அணிக்கான சரியான காம்பினேஷனை உருவாக்கவும் செய்யலாம்.
ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பவுலிங் ஆல்ரவுண்டரான ரஷித் கான் அணியில் இடம்பிடித்திருந்தாலும், முதுகு வலியால் அவதிப்படுவதால் இந்த தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.
இந்தியா, விளையாடியிருக்கும் கடைசி 5 டி20 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை 4 வெற்றி, ஒரு தோல்வி என இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பிட்ச் நிலவரம்
போட்டி நடைபெறும் மெஹாலி கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஸ்பின்னர்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சேஸிங் செய்த அணியே அதிக வெற்றியை பெற்றுள்ளது. எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 4 முறை வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவு கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்