Mitchell Marsh: தாய்நாடு திரும்பிய மிட்செல் மார்ஷ்-உலகக் கோப்பை எஞ்சிய ஆட்ங்களில் விளையாடமாட்டாரா?
Nov 02, 2023, 11:23 AM IST
ICC Cricket World Cup 2023: மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார்.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார். அவர் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருந்து காலவரையின்றி வெளியேறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கூற்றுப்படி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று இந்தியாவிலிருந்து ஆஸி.,க்கு சென்றார், மேலும் அவர் போட்டியைத் தொடர்வார் என்பதில் உறுதியாக இல்லை.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஏற்கனவே காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான சனிக்கிழமை போட்டியில் விளையாடவில்லை. இப்போது, உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து மார்ஷ் திடீரென வெளியேறியது, அரையிறுதியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆஸி.க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேக்ஸ்வெல் மற்றும் மார்ஷ் மாற்று
ANI செய்தி நிறுவனம் படி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி, சீன் அபோட், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் போட்டியிடுவார்கள், அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்கா அணியுடன் ரிசர்வ் ஆக பயணம் செய்கிறார்.
2023 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ்
மார்ஷ் இதுவரை உலகக் கோப்பையில் 37க்கு மேல் சராசரியாக 225 ரன்களையும், இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இங்கிலாந்துக்கு எதிராக நவம்பர் 4ம் தேதியும், வங்கதேசம் நவம்பர் 11ம் தேதியும் விளையாட உள்ளது.
டாபிக்ஸ்