தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Icc Changes Stumping Rule: டி.ஆர்.எஸ் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஸ்டம்பிங் விதியை மாற்றியது ஐ.சி.சி.

ICC changes stumping rule: டி.ஆர்.எஸ் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஸ்டம்பிங் விதியை மாற்றியது ஐ.சி.சி.

Manigandan K T HT Tamil

Jan 04, 2024, 01:10 PM IST

google News
ஸ்டம்பிங் மேல்முறையீடு மற்றும் concussion substitutes குறித்த விதி மாற்றங்கள் டிசம்பர் 12, 2023 முதல் நடைமுறைக்கு வந்தன. (AP)
ஸ்டம்பிங் மேல்முறையீடு மற்றும் concussion substitutes குறித்த விதி மாற்றங்கள் டிசம்பர் 12, 2023 முதல் நடைமுறைக்கு வந்தன.

ஸ்டம்பிங் மேல்முறையீடு மற்றும் concussion substitutes குறித்த விதி மாற்றங்கள் டிசம்பர் 12, 2023 முதல் நடைமுறைக்கு வந்தன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கிரிக்கெட் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன்படி நடுவர்கள் இனி மறுஆய்வு முறை (டி.ஆர்.எஸ்) பரிந்துரைகளின் போது caught-behind scenario-ஐ கருத்தில் கொள்ளாமல் ஸ்டம்பிங்கிற்கான side-on replays மட்டுமே மதிப்பிடுவார்கள்.

இந்த மாற்றம் டிசம்பர் 12, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, அதன்படி ஒரு அணி ஸ்டம்பிங் செயல்முறையில் caught-behind-ஐ குறிப்பிட விரும்பினால், இப்போது caught-behind மேல்முறையீட்டுக்கு தனியாக டி.ஆர்.எஸ் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, அணியின் டி.ஆர்.எஸ் ஆப்ஷனை பயன்படுத்தாமல் ஸ்டம்பிங்கிற்குப் பிறகு aught-behind ரிவ்யூவை பரவலாகப் பயன்படுத்தினார்.

இனி, ஸ்டம்பிங்கிற்கான அப்பீல் side-on camera இல் இருந்து காட்சிகளை மட்டுமே நடுவர்கள் பரிசீலிப்பார்கள், ஏனெனில் அவர்கள் Snickometer-ஐ சரிபார்க்க மாட்டார்கள்.

"இந்த மாற்றம் ஸ்டம்பிங் மதிப்பாய்வை ஸ்டம்பிங் செய்யப்பட்டவர்களை மட்டுமே சரிபார்க்க மட்டுப்படுத்துகிறது, எனவே பிளேயர் ரிவ்யூவை தேர்வு செய்யாமல் மற்ற dismissal முறைகளுக்கு (அதாவது, caught behind) ஃபீல்டிங் அணிக்கு free review ஐ எடுக்கவிடாமல் தடுக்கிறது" என்று ஐ.சி.சியின் புதிய திருத்தம் கூறுகிறது.

காயம் காரமமாக களமிறக்கப்படும் மாற்றுவீரர் விதியிலும் ஐசிசி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது, பந்துவீசும் சமயத்தில் ஒரு வீரர் காயம் காரணமாக வெளியேறினால், மாற்று வீரர் பந்துவீச அனுமதிக்கப்பட மாட்டார்.

இதேபோல், விளையாடும்போது ஏற்படும் காயத்தை மதிப்பீடு செய்து சிகிச்சை அளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை நான்கு நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது ஐசிசி.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி