IPL 2024 ஏலத்தில் ஒவ்வொரு அணி உரிமையாளருக்கும் எவ்வளவு பணம் உள்ளது?
Dec 18, 2023, 05:47 PM IST
முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது ஏலம் துபாயில் உள்ள கோகோ-கோலா அரங்கில் செவ்வாய்கிழமை (டிசம்பர் 19) நடைபெற உள்ளது, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர் ஆவார். ஆப்கானிஸ்தானின் 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்திற்கான தேர்வுப்பட்டியலில் மிகவும் வயதான வீரர் ஆவார்.
அப்போது 77 வீரர்கள் வரை உரிமையாளர்களால் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு நட்சத்திரங்கள், அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட மொத்தம் 333 வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் பெயர்களை கொடுத்துள்ளனர். நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
கடந்த இரண்டு பதிப்புகளில் பெண்கள் பிரீமியர் லீக் ஏலம் விடுபவரா இருந்த மல்லிகா சாகர், ஐபிஎல் 2024 ஏலத்தில் எட்மீட்ஸுக்குப் பதிலாக நடத்தவுள்ளார்.
2024 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பணம் உள்ளது?
குஜராத் டைட்டன்ஸ் (ரூ 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ. 14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்