Harry Brook: முதலில் பேர்ஸ்டோ! இப்போ ஹாரி ப்ரூக் - தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகல்
Mar 14, 2024, 08:00 AM IST
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாவில்லை இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக். தற்போது ஐபிஎல் தொடர் முழுவதையும் மிஸ் செய்கிறார்.
இங்கிலாந்து அணியில் இளம் பேட்ஸ்மேனாக இருப்பவர் ஹார் ப்ரூக். இவர் ஐபிஎல் 2024 தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
டெல்லி அணியில் இடம்பிடித்திருக்கும் ஹார் ப்ரூக்
கடந்த சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய இவரை அந்த அணி விடுவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில் இவரை ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
கடந்த சீசனில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீரராக ப்ரூக் இருந்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும் விதமாக பெரிய இன்னிங்ஸை விளையாடவில்லை. அத்துடன் பார்ம் இல்லாமலும் ரன் குவிப்பதில் தடுமாடினார். இருப்பினும் இவரது திறமை மீது நம்பிக்கை வைத்து டெல்லி கேபிடல்ஸ் இந்த முறை எடுத்த நிலையில் அவர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் தனிப்பட்ட காரணங்களால் மிஸ் செய்தார் ப்ரூக். அப்போது, ப்ரூக் விலகல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், " ப்ரூக் குடும்பத்தினர் அவருக்கு ப்ரைவசி வேண்டும் என மரியாதையுடன் கேட்டுக்கொண்டனர். அதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ப்ரூக்கின் தனியுரிமை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்வதாக" தெரிவித்திருந்தது.
ப்ரூக்குக்கு மாற்று வீரர் யார்?
டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக இருந்து வந்த ஹாரி ப்ரூக் விலகியிருப்பதாக அவருக்கான மாற்று வீரரை தேடும் முயற்சியில் டெல்லி அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த சீசனில் டெல்லி அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவில்லாமல் இருந்தத தான். அதை பலப்படுத்தும் விதமாக ப்ரூக் எடுக்கப்பட்ட நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
ப்ரூக் போல் பல அணிகளிலும் முக்கிய வீரர்கள் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பின்னர், போட்டிகள் தொடங்கும்போது வீரர்கள் விலகுவதாக அறிவிக்கும் விஷயத்தில் பிசிசிஐ தலைமயிட்டு சுமூக தீர்வ அணிகளுக்கு அளிக்க வேண்டும் என ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாப்பை எதிர்கொள்ளும் டெல்லி
ஐபிஎல் 2024 தொடரில் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ். இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி பஞ்சாப் மாநில் முல்லான்பூரில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மகாராஜா யாதவிந்த்ரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஜானி பேர்ஸ்டோ விலகல்
முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார். பேர்ஸ்டோ விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்து வீரர் பில் சால்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் வரும் 22ஆம் தேதி மோதுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9