Rahmanullah Gurbaz: தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடிய குர்பாஸ்
May 22, 2024, 11:43 AM IST
Rahmanullah Gurbaz: தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முக்கியப் போட்டியில் விளையாடி அந்த அணி ஃபைனலுக்குச் செல்ல பங்களித்தார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது தாயார் ஆப்கானிஸ்தானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். குவாலிஃபையர் 1 போட்டியில் அவர் விளையாடி அசத்தினார். விக்கெட் கீப்பரான அவர் கொல்கத்தா அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாக நேற்றைய மேட்ச்சில் விளையாடினார். அவர் 14 பந்துகளில் 23 ரன்களை விளாசினார்.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் விரைவான 23 ரன்களை அடித்து கொல்கத்தாவின் 160 ரன்களைத் துரத்துவதற்கு ஒரு களத்தை அமைத்துக் கொடுத்தார். செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியின் இந்த பதிப்பில் 22 வயதான அவர் தனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் கிரிக்கெட் விளையாட தயாரானது நெகிழ்ச்சியையும், கிரிக்கெட் மீதான அவரது நேசத்தையும் காண்பிக்கிறது.
"நான் வரேன்னு சொன்னேன்"
"அம்மாவுக்கு இன்னும் உடம்பு சரியில்லை. நான் அங்கு சென்றேன்" என்று குர்பாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
"பில் சால்ட் வெளியேறியவுடன் கே.கே.ஆரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னை அழைத்து, 'குர்பாஸ், எங்களுக்கு நீங்கள் தேவை. உங்க நிலைமை என்ன?' என கேட்டனர்.
"நான் வரேன்னு சொன்னேன்." என்றார்.
அவர் தனது தாயாரை கவனித்துக் கொள்ள திரும்பியபோதிலும், அணிக்கு அவர் மிகவும் தேவைப்பட்டபோது திரும்பினார்.
"என் அம்மா இன்னும் மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார், நான் ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறேன்," என்று அவர் கூறினார்.
'கேகேஆரும் எனது குடும்பம்'
"ஆனால் எனது கே.கே.ஆரும் எனது குடும்பம் என்று எனக்குத் தெரியும். அவர்களுக்கு நான் இங்கு தேவைப்பட்டேன், எனவே நான் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பி வந்தேன். இது கடினம், இது கடினமானது, ஆனால் நான் நிர்வகிக்க வேண்டும்." என்றார்.
வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஹைதராபாத் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்க, 13.4 ஓவர்களில் கொல்கத்தா அணியின் சேஸிங் வேகத்தை அமைத்து நான்காவது ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
"ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.
"உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் நன்றாக தயார் செய்து தயாராக இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஐபிஎல்லில் விளையாடும் நேரம் குறைவாக இருந்தபோதிலும், குர்பாஸ் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்காக 55 முறை விளையாடியுள்ளார், மேலும் அடுத்த மாதம் நடைபெறும் உலகக் கோப்பையில் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
பெரும்பாலான ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே போட்டிக்காக மேற்கிந்திய தீவுகளில் உள்ளனர், ஆனால் குர்பாஸ் தனது கவனம் ஐபிஎல் இறுதிப் போட்டியில் இருப்பதாகவும், "தனது முதல் முன்னுரிமை கே.கே.ஆர்" என்றும் கூறினார்.
இறுதிப் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான புதன்கிழமை ஆட்டத்தின் வெற்றியாளருடன் ஹைதராபாத் வெள்ளிக்கிழமை மோதும். குவாலிஃபையர் 2 இல் வெற்றி பெறும் அணி பைனலில் கொல்கத்தாவுடன் மோதும்.
டாபிக்ஸ்