தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Team India: இன்னும் 2 நாள் தான் உள்ளது! மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பரிக்கா சென்ற இந்திய அணி

Team India: இன்னும் 2 நாள் தான் உள்ளது! மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பரிக்கா சென்ற இந்திய அணி

Jan 06, 2024, 03:53 PM IST

google News
மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பரிக்கா சென்றடைந்துள்ளது இந்திய அணி. போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாள்கள் இருந்து வரும் நிலையில் அவர்கள் அணியுடன் அனைவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (PTI)
மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பரிக்கா சென்றடைந்துள்ளது இந்திய அணி. போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாள்கள் இருந்து வரும் நிலையில் அவர்கள் அணியுடன் அனைவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பரிக்கா சென்றடைந்துள்ளது இந்திய அணி. போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாள்கள் இருந்து வரும் நிலையில் அவர்கள் அணியுடன் அனைவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் இந்தியா முதலில் டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென் ஆப்பரிக்கா சுற்றுபயணம் செய்யும் இந்தியா டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடுகிறது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி டர்பன் சென்றடைந்தது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அணியில் இல்லாத நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளார்.

தற்போது ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாடி வரும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் அணியில் இணையவில்லை. இந்த தொடரின் துணை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை போல் இளம் ஓபனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில்லும் ஐரோப்பாவில் உள்ளார். அவரும் அணியில் இணையவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக பவுலிங் ஆல்ரவுண்டர் தீபக் சஹாரும் செல்லவில்லை. அவர் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. அத்துடன் தீபக் சஹாருக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தொடர் தொடங்குவதற்கு முன்னர் அனைவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி