தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ruturaj Gaikwad: காயமடைந்த ருதுராஜ் தென் ஆப்பரிக்கா டெஸ்ட் தொடரில் விலகல்! மாற்று வீரராக களமிறங்கும் புதுமுக வீரர்

Ruturaj Gaikwad: காயமடைந்த ருதுராஜ் தென் ஆப்பரிக்கா டெஸ்ட் தொடரில் விலகல்! மாற்று வீரராக களமிறங்கும் புதுமுக வீரர்

Dec 23, 2023, 06:05 PM IST

google News
இந்திய ஏ அணியில் பிசிசிஐ பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. தென் ஆப்பரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்திருந்த ஹர்ஷித் ராணா தொடரை விட்டு விலகியுள்ளார். (AP)
இந்திய ஏ அணியில் பிசிசிஐ பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. தென் ஆப்பரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்திருந்த ஹர்ஷித் ராணா தொடரை விட்டு விலகியுள்ளார்.

இந்திய ஏ அணியில் பிசிசிஐ பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. தென் ஆப்பரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்திருந்த ஹர்ஷித் ராணா தொடரை விட்டு விலகியுள்ளார்.

தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸ் டே டெஸ்ட் ஆட்டமாக சென்சுரியனில் டிசம்ர் 26ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரண்டாவது போட்டியின்போது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவகுழு பரிந்துரையின்படி பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விரைந்தார்.

ருதுராஜுக்கு ஏற்பட்ட காயம் குணமடையா சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ருதுராஜுக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன்் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக க்கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங்கின்போது ருதுராஜ் கெய்க்வாட் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைபடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன் பின்னர் பிசிசிஐ மருத்துவ குழு அறிவுறுத்தலின்படி அவர் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ருதுராஜ் காயத்துக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைத்து உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ருதுராஜுக்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர்" என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தென் ஆப்பரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ மோத இருக்கும் நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணியிலும் பிசிசிஐ பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அந்த அணியில் இடம்பிடித்திருந்த ஹர்ஷித் ராணா தசைபிடிப்பு காரணமாக விலகியுள்ளார். அத்துடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஜத் பட்டிதார், ஷர்ப்ரஸ் கான், ஆவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த ஸிபின்னர் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஏ vs தென் ஆப்பரிக்கா ஏ: அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ராஜத் பட்டிதார், ஷப்ரஸ் கான், திலக் வர்மா, துரும் ஜுரல் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், நவ்தீப் சைனி, ஆகாஷ் தீப், வித்வாத் கவீரப்பா, மானவ் சுதார், ரிங்கு சிங்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி