HT Cricket Special: 99 நாட் அவுட், 99 அவுட்! Nervous ninetiesஇல் சச்சினுக்கு முன்னோடியாக திகழ்ந்த ரிச்சி ரிச்சர்ட்சன்
Jan 12, 2024, 06:00 AM IST
சச்சின் வருகைக்கு முன்னர் 90 ரன்களுக்கு மேல் எடுத்து அதிக முறை அவுட்டான பேட்ஸ்மேனாக இருந்தவர் ரிச்சி ரிச்சர்ட்சன். ஆனாலும் இவர் அட்டகாச பேட்ஸ்மேனாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் நாயகனாகவும் வர்ணிக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 1983 முதல் 1996 வரை 15 ஆண்டு காலம் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தவர் ரிச்சி ரிச்சடர்ட்சன். அட்டகாச பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்பட்ட இவர், வேகப்பந்து வீச்சாளர்களை எந்த பயமும் இன்றி எதிர்கொண்டு ரன் குவிப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
உலகமே விவன் ரிச்சர்ட்ஸை பற்றி பேசி புகழ்ந்து கொண்டிருக்கையில் சைலண்டாக சாதித்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிச்சர்ட்சன். எதிரணியினர் ரிச்சர்ட்ஸ்க்கு ஸ்கெட்ச் போட்டு இவரை தவிர்க்க, அதை சாதமாக்கி பவுலர்களை தவிடுபொடியாக்கும் வீரராக இருந்துள்ளார்.
டெஸ்ட், ஒரு நாள் என இருவகை போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்தபோதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் நாயகனாக வலம் வந்தார் ரிச்சர்ட்சன்.
டெஸ்ட் போட்டியில் 44.39, ஒரு நாள் போட்டியில் 33.41 சராசரியுடன் டிசெண்டான பேட்ஸ்மேனாக இருந்து வந்த இவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் சில காலம் செயல்பட்டுள்ளார். இவரது கேப்டன்சியின் தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மிரட்டல் வேகப்பந்து வீச்சு காம்போவான கர்ட்லி அம்ரோஸ், கர்ட்னி வால்ஸ் ஆகியோர் உலகை அச்சுறுத்தும் பவுலர்களாக உருவெடுத்தார்கள். அதேபோல் பேட்டிங்கில் எக்கச்சக்க சாதனை புரிந்த பிரெயன் லாரவும் உலக அளவில் முன்னணி பேட்ஸ்மேனாக உருமாறினார்.
நான்கு ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்ட இவர், மூன்று உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். இவரது பேவரிட் அணி இந்தியா என்று சொல்லும் அளவுக்கு, இந்திய பவுலர்களை துவைத்து எடுத்துள்ளார்.
டெஸ்ட், ஒரு நாள் ஆகி இரு வகை போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராகவே அறிமுகமானார் ரிச்சர்ட்சன். இவரது டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோர் இந்தியாவுக்கு எதிராகத்தான் அடிக்கப்பட்டது.
ஹெல்மெட்கள் பயன்பாடு பேட்ஸ்மேன்கள் மத்தியில் பெரிதாக இல்லாத காலக்கட்டத்தில் வட்டமான ஹாட் அணிந்து ஸ்டைலாக களத்தில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேனாக இருந்து வந்துள்ளார் ரிச்சர்ட்சன்.
ஒரு நாள் போட்டியில் 99 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருப்பவர்களில் ஒருவராக இருந்து வரும் ரிச்சர்ட்சன், 99 ரன்னில் அவுட்டான பேட்ஸ்மேன்கள் லிஸ்டிலும் இருந்து வருகிறது.
ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் வீழ்வதற்கு காரணமாக இருந்தவர், அதிக முறை 90 ரன்கள் எடுத்தவர் உள்பட சில சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் ரெப்ரியாக பல போட்டிகளில் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் நெர்வர் நைட்டில் என்கிற சொல்லாடல் உண்டு. 90 ரன்கள் எடுத்த பிறகு அதை 100 ரன்களாக மாற்ற வேண்டும் என்ற ஆசையும், பதட்டமும் பேட்ஸ்மேனுக்கு தொற்றிக்கொள்ளும் போது பேட்ஸ்மேனின் விளையாடுவதை இப்படி வர்ணிப்பார்கள்.
அந்த வகையில் சச்சின் டென்டுல்கருக்கு முன்னோடியாக 90 ரன்கள் எடுத்த பிறகு பதட்டத்தை வெளிக்காட்டுபவராக இருந்திருக்கிறார் ரிச்சி ரிச்சர்ட்சன். வெஸ்ட் இண்டீஸ் 80, 90ஸ் காலத்தில் முக்கிய பேட்ஸ்மேனாகவே ஜொலித்துள்ள ரிச்சி ரிச்சர்ட்சனுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்