HT Cricket Special: அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்ற தந்த கேப்டன்! சிறந்த பீல்டராக பெயரெடுத்தவர்
Jan 05, 2024, 07:00 AM IST
மிக இளம் வயதிலேயே இந்தியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அதை திறன்படி செய்த காட்டியதோடு வெற்றி என்கிற தாகத்தை இந்திய வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தியவராகவும் மன்சூர் அலிகான் பட்டோடி இருந்தார்.ி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாகவும், டைகர் பட்டோடி என்ற நன்கு அறியப்பட்டவரும் தான் மன்சூர் அலி கான் பட்டோடி. நவாப் குடும்பத்தை சேர்ந்தவரான மன்சூர் அலி கான் தந்தை இப்திகர் அலி கானும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
இந்தியாவுக்காக 1961 முதல் 1975 வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் இவர் விளையாடியிருக்கும் 46 டெஸ்ட் போட்டிகள் 40 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.
மிக இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் மன்சூர் அலிகான் பட்டோடி. கேப்டனாக முதல் போட்டியில் விளையாடியபோது இவரது வயது 21. கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய மன்சூர் அலிகானுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது.
இருப்பினும் தனது ஒட்டு மொத்த கிரிக்கெட் கேரியரிலும் இந்த குறைபாட்டுடனே விளையாடிய அவர், அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். துடிப்பு மிக்க வீரராக திகழ்ந்த இவர் தைரியாக லாஃப்ட் ஷாட் ஆடுவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார்.
அதேபோல் பீல்டிங்கில் கில்லியாக இருந்த காரணத்தினால், இவர் விளையாடிய காலகட்டத்தில் உலகின் சிறந்த பீல்டராக போற்றப்பட்டார். இந்தியா அந்நிய மண்ணில் தனது முதல் வெற்றியை நியூசிலாந்துக்கு எதிராக 1967இல் பதிவு செய்தது. அந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அணியை சிறப்பாக வழிநடத்திய மன்சூர் அலிகான் பட்டோடி வெற்றியை பெற்று தந்தார். இவரது கேப்டன்சியில் இந்தியா 9 வெற்றிகளை பெற்றது. தோல்விக்கு எதிராக போராடி வெற்றி குவிக்கலாம் என்கிற தைரியத்தையும், எண்ணத்தையும் விதைத்த கேப்டனாக இருந்துள்ளார் மன்சூர் அலிகான் பட்டோடி.
இளம் வயதிலேயே இரட்டை சதமடித்த வீரர், இளம் வயதில் கேப்டனாக செயல்பட்டவர் போன்ற பெருமைக்களுக்கு சொந்தகாரராக உள்ளார்.
பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், நடிகை சோகா அலி கான் ஆகியோர் இவரது மகன், மகள் ஆவார்கள். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சி.கே. நாயுடு விருதை இவர் வென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு உத்வேகம் அளித்த கேப்டனாக திகழ்ந்த மன்சூர் அலிகான் பட்டோடி பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்