தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Stuart Clark: பூர்வீகம் இந்தியா! விளையாடியது ஆஸ்திரேலியாவுக்காக..! குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பவுலர்

HBD Stuart Clark: பூர்வீகம் இந்தியா! விளையாடியது ஆஸ்திரேலியாவுக்காக..! குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பவுலர்

Sep 28, 2023, 06:20 AM IST

google News
ஆஸ்திரேலியாவுக்காக குறுகிய காலம் விளையாடினாலும் இரண்டு முக்கிய தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றவர் ஸ்டூவர்ட் கிளார்க்.
ஆஸ்திரேலியாவுக்காக குறுகிய காலம் விளையாடினாலும் இரண்டு முக்கிய தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றவர் ஸ்டூவர்ட் கிளார்க்.

ஆஸ்திரேலியாவுக்காக குறுகிய காலம் விளையாடினாலும் இரண்டு முக்கிய தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றவர் ஸ்டூவர்ட் கிளார்க்.

ஆஸ்திரேலியா அணிக்காக 2006 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்டூவர்ட் கிளார்க். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களில் மிகவும் சாதுவானராகவோ இருந்ததால் என்னமோ இவரது கிரிக்கெட் வாழ்க்கையும் அந்த அணியில் மிகவும் குறுகிய காலமே இடம்பிடித்தது.

கிளார்கின் பெற்றோர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை சென்னையை சேர்ந்தவராகவும், தாய் கேஜிஎஃப் கோலர் தங்க வயலை சேர்ந்தவராகவும் இருக்கும் நிலையில் ஆங்லோ இந்தியனாக ஆஸ்திரேலியாவில் பிறந்து அங்கேயே செட்டிலானார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிளார்க்கை சர்ப்ரைஸாக 2005 ஆஷஷ் தொடரில் சேர்க்கப்பட்டார். பிரதான் பவுலர்களான மெக்ராத், பிரட்லீ ஆகியோர் காயமடைந்த நிலையில், அப்போது உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கி கொண்டிருந்த கிளார்க் சேர்க்கப்பட்டார். மெக்ராத் போன்று அதே வேகத்தில் பந்து வீசக்கூடிய கிளார்க், ஸ்விங் செய்வதிலும் வல்லவராக இருந்ததால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த தொடரில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து 2006இல் தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டு அப்போது மெக்ராத்துக்கு பதிலாக களமிறங்கினார்.

முதல் போட்டியிலேயே 5 விக்கெட் இன்னிங்ஸ் உள்பட 9 விக்கெட்டுகளை எடுத்து தனது தேர்வை நியாயபடுத்தினார். இந்த டெஸ்ட் போட்டிக்கு இடையே ஐசிசி உலக லெவன், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்பட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார். பின்னர் 2007இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஷ் தொடரில் விளையாடிய கிளார்க் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.

2007 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும் ஒரெயொரு போட்டியில் மட்டுமே விளையாடிய கிளார்க் ஒரு விக்கெட் எடுத்தபோதிலும், அந்த தொடரில் சிறந்த எகானமி கொண்ட பவுலராக முன்னிலை வகித்தார். அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்த கிளார்க் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலரான ஷர்ப்ராஸ் நவாஸ் போன்ற பவுலிங் ஸ்டைலை கொண்டிருக்கும் கிளார்க்கை, ஷர்பராஸ் என்றே பலரும் அழைத்தார்கள். காயம் காரணமாக தேசிய அணியிலிருந்து விளையாடும் வாய்ப்பை இழந்த கிளார்க் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்த போதிலும், 2012இல் அதற்கும் முழுக்கு போட்டார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர்களில் சிரித்த முகத்துடன் இருக்கும் கிளார்க், மற்ற பவுலர்களெல்லாம் ஆக்ரோஷத்தில் பொங்கி வடிய இவர் மட்டும் சாந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வித்தியாசமான வீரராக திகழ்ந்தார். ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் வீரர்களின் அடிப்படை குணமான ஸ்லெட்ஜிங் செய்யாத வீரராக இருந்ததாலோ என்னவோ இவர் தொடர்ந்து தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறாமல் போனார்.

இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய குறுகிய காலகட்டத்தில் 62 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 160 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டூவர்ட் கிளார்க்குக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி