தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Fact Check: ஐபிஎல் போட்டியின் போது தாக்கப்பட்டாரா Csk ரசிகர்.. சமீபத்தில் நடைபெற்ற சம்பவமா? - உண்மை என்ன?

Fact Check: ஐபிஎல் போட்டியின் போது தாக்கப்பட்டாரா CSK ரசிகர்.. சமீபத்தில் நடைபெற்ற சம்பவமா? - உண்மை என்ன?

Newsmeter HT Tamil

May 23, 2024, 01:18 PM IST

google News
Fact Check: நடப்பு ஐபிஎல் போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
Fact Check: நடப்பு ஐபிஎல் போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.

Fact Check: நடப்பு ஐபிஎல் போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.

நடப்பு 2024 ஐபிஎல் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளரும் தோனியின் மிகப்பெரிய ரசிகருமான ஒருவர் தாக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ்மீட்டர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

"கன்னடத்துகாரன் தமிழன், சென்னைகாரண அடிக்கிறான், இங்க கன்னடதான தலைவர், சூப்பர் ஸ்டார்னு சொல்லி ** *** இருக்கானுங்க வெக்கம் கெட்ட DVD பசங்க..த்து" என்ற கேப்ஷனுடன் சிஎஸ்கே ரசிகரை சிலர் தாக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தற்போது நடைபெற்றது போன்று பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது தெரியவந்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி TOI plus என்ற Times of Indiaவின் பேஸ்புக் பக்கம், "தோனியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சரவணன் ஹரி செவ்வாய்க்கிழமை சேப்பாக்கத்திற்கு வெளியே தாக்கப்பட்டார்." என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே வீடியோவை வெளியிட்டுள்ளது.

நடந்தது என்ன?

தொடர்ந்து கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி புதிய தலைமுறை டிவி இது தொடர்பாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "பல்வேறு அரசியல் கட்சியினர் ஐபிஎல் போட்டியை சென்னையின் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஐபிஎல் போட்டியை காண வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செய்தியாளர்களை சந்தித்த சரவணன், "நாம் தமிழர் கட்சியை சேர்ந்த என்னுடைய நண்பர்களும், தமிழ் உணர்வாளர்கள் 15 பேரும் என்னை தாக்கினர்" என்று கூறினார். இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி விரிவான செய்தி வெளியிட்டுள்ள Crictracker, காவேரி பிரச்னையின் காரணமாக சிஎஸ்கே ரசிகரான சரவணன் ஹரி தாக்கப்பட்டதாகவும், இப்பிரச்னை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

முடிவு

Newsmeter தேடலின் முடிவாக சமீபத்தில் சிஎஸ்கே ரசிகர் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review: சேப்பாக்கத்திற்கு வெளியே தாக்கப்படும் சிஎஸ்கே ரசிகர்

Claimed By: Social Media users

Claim Reviewed By: NewsMeter

Claim Source: Facebook, X, Threads

Claim Fact Check: False

Fact: 2018 ஆம் ஆண்டு காவேரி பிரச்சினையின் போது தாக்கப்பட்ட சிஎஸ்கே ரசிகர் குறித்த காணொலி.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் Boom இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி